Defence Minister Rajnath Singh: தீர்த்தம்.. தாயத்து.. ராணுவ ஆயுதங்களுக்கு பூஜை செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்..
Defence Minister Rajnath Singh: மந்திரங்கள் ஓத, தீர்த்தம் தெளித்து, தாயத்து காட்டி ராணுவ ஆயுதங்களுக்கு பூஜை செய்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
Defence Minister Rajnath Singh: மந்திரங்கள் ஓத, தீர்த்தம் தெளித்து, தாயத்து காட்டி ராணுவ ஆயுதங்களுக்கு பூஜை செய்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சரஸ்வதி பூஜை கொண்டாடியுள்ளார்.
நவராத்திரி பண்டிகை எனப்படும் தசரா பண்டிகையையொட்டி உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் உள்ள அவுலி ராணுவ நிலையத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சரஸ்வதி பூஜை செய்தார். பூஜை முடிந்த் பின்னர் "நமது நாடு நமது ஆயுதப் படைகளின் கைகளில் பாதுகாப்பாக உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஆயுத பூஜை' நடைபெறும் ஒரே நாடு இந்தியா" என்று அவர் கூறினார். இந்த விழாவில் இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவும் கலந்து கொண்டார்.
औली में ‘शस्त्र पूजन समारोह’ में सम्बोधन
— Rajnath Singh (@rajnathsingh) October 5, 2022
https://t.co/vk80WYjqex
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள வீடியோவில், நாட்டின் பாதுகாப்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகள் ஆகியவற்றிக்கு பூ வைத்து அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பூஜை நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவும் வந்தனர். அங்கு ஏற்கனவே இருந்த இருவர் மந்திரங்களை ஓத தொடங்கினர். அதன் பின்னர் அவர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு தீர்த்தம் வழங்கினர். அவர் தீர்த்தத்தினை வாங்கி குடித்தார். அதன் பின்னர் அவருக்கு நெற்றியில் பொட்டு வைக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது கையில் தாயத்து கட்டி விடப்பட்டது.
दशहरा के अवसर पर आयोजित ‘शस्त्र पूजन समारोह’ https://t.co/wzk33RVrCO
— Rajnath Singh (@rajnathsingh) October 5, 2022
அதன் பின்னர் அருகில் நிற்க வைக்கப்பட்டிருந்த பீரங்கிகளுக்கு பூக்களை வைத்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங். அதன் பின்னர் பீரங்கிகளுக்கு மாலை அணிவித்தார். அதன் பின்னர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது கையாலே தேங்காய் உடைத்து, அதனுள் இருந்த தேங்காய் நீரை பீரங்கிகள் மீது தெளித்தார். இவ்வாறு ராணுவ ஆயுதங்களுக்கு பாதுகாப்பூத் துறை அமைசசர் ராஜ்நாத் சிங் பூஜை செய்தார். இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே ரஃபேல் போர் விமானம் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது, இவ்வாறு பூஜை செய்யப்பட்டது குறித்தும், புதிய பாராளுமன்ற கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவில் நடத்தப்பட்ட பூஜைகள் குறித்தும் பலரும் விமர்சித்த நிலையில், தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் தீர்த்தம், தாயத்து என பூஜை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது