FMCG சந்தையில் ஆதிக்கும் செலுத்தும் டான்ட் காந்தி டூத் பேஸ்ட்.. பதஞ்சலி நிறுவனம் பெருமிதம்!
FMCG சந்தையில் டான்ட் காந்தி டூத் பேஸ்ட் ஆதிக்கம் செலுத்தி வருவதாக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கூறியுள்ளது. வேம்பு, கிராம்பு, புதினா மற்றும் பிப்பிலி போன்ற ஆயுர்வேத மற்றும் இயற்கை பொருட்களுக்கு பெயர் பெற்றது பதஞ்சலியின் டான்ட் காந்தி.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) சந்தையில் டான்ட் காந்தி டூத் பேஸ்ட் ஆதிக்கம் செலுத்தி வருவதாக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கூறியுள்ளது. ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் டான்ட் காந்தி மற்றும் பிற டூத் பேஸ்ட் பிராண்டுகள் மீதான நுகர்வோர் ஆர்வத்தை ஒப்பிட்டுப் பார்த்த சமீபத்திய ஆய்வை நிறுவனத்தை மேற்கோள் காட்டி இந்தக் கூற்றை முன்வைத்துள்ளது பதஞ்சலி.
நுகர்வோர் விருப்பங்களையும் அவர்கள் எந்த அளவுக்கு திருப்தி அடைந்தார்கள் என்பதை புரிந்துகொள்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இந்தியாவின் FMCG சந்தை நாட்டின் நான்காவது பெரிய சந்தையாகும். கடந்த 2020 ஆம் ஆண்டில், 110 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை அளவைக் கொண்டுள்ளது. இது 14.9% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்கிறது.
இதுகுறித்து பதஞ்சலி நிறுவனம் கூறுகையில், "வேம்பு, கிராம்பு, புதினா மற்றும் பிப்பிலி போன்ற ஆயுர்வேத மற்றும் இயற்கை பொருட்களுக்கு பெயர் பெற்றது பதஞ்சலியின் டான்ட் காந்தி. யோக குரு பாபா ராம்தேவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த டூத் பேஸ்ட், உள்நாட்டு மற்றும் மூலிகைகளை விரும்பும் நுகர்வோரை ஈர்க்கிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டில், டான்ட் காந்தியின் நிகர லாபம் ₹485 கோடியாக இருந்தது. அதன் முக்கிய போட்டியாளர்களில் கோல்கேட், பெப்சோடென்ட், சென்சோடைன் மற்றும் க்ளோசப் ஆகியவை அடங்கும். சந்தையில் 50% க்கும் அதிகமான பங்கைக் கொண்டு சந்தையில் முன்னிலை வகிக்கிறது கோல்கேட் நிறுவனம். பதஞ்சலி 11% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. அதன் ஆயுர்வேத பொருட்கள் காரணமாக சீராக வளர்ந்து வருகிறது.
300 நுகர்வோருக்கு கேள்விகளை எழுப்பி, இதுதொடர்பான முதன்மைத் தரவைச் சேகரித்திருக்கிறது இந்த ஆய்வு. இரண்டாம் நிலைத் தரவுகள் பத்திரிகைகள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளிலிருந்து பெறப்பட்டன. அதன் மூலிகைத் தன்மை மற்றும் பாபா ராம்தேவின் செல்வாக்கு காரணமாக நுகர்வோர் தந்த் காந்தியை விரும்புகிறார்கள் என்பதை முடிவுகள் காட்டுகின்றன.
இருப்பினும், கோல்கேட் போன்ற பிராண்டுகள் மீதான நுகர்வோர் நம்பிக்கை இன்னும் அப்படியே உள்ளது. மற்ற நிறுவனங்கள் ஆயுர்வேத பொருட்கள் மற்றும் செல்வாக்கு மிக்க பிராண்ட் தூதர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வு பரிந்துரைத்தது. மேலும், டான்ட் காந்தி விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடிகள் மூலம் கிராமப்புறங்களில் அதன் வரம்பை விரிவுபடுத்தும் என்றும் அது கூறியது.
டான்ட் காந்தியின் புகழ் அதன் தரம் மற்றும் ஆயுர்வேத பண்புகளிலிருந்து உருவாகிறது என்றும் நிறுவனம் கூறியது. இந்த ஆய்வு, உள்நாட்டு மற்றும் மூலிகைப் பொருட்களுக்கான வளர்ந்து வரும் தேவையைக் குறிக்கிறது, இது, பதஞ்சலிக்கு இந்தியாவில் சந்தைத் தலைவராக மாறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.





















