(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: காதலனை கைவிட்டு கணவரிடம் மீண்டும் திரும்பிய பெண்... ஆடையைக் கிழித்து தாக்கப்பட்ட கொடூரம்!
தனது கணவரை தங்களின் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த நபருடன் வாழச் சென்ற பெண் எட்டு மாதங்களுக்குப் பிறகு தனது கணவரிடமே மீண்டும் திரும்பியுள்ளார்.
கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ சென்ற பெண்ணை காதலன் தேடிச் சென்று போய் ஆடைகளைக் கிழித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம், ஜபுவா மாவட்டம், ருபரேல் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக இப்பெண் தனது கணவரை விட்டுவிட்டு தங்களின் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் கட்டாரா எனும் நபருடன் வாழச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், எட்டு மாதங்களுக்குப் பிறகு தனது கணவரிடமே அப்பெண் மீண்டும் திரும்பியுள்ளார்.
Tribal women continue to be publicly humiliated and brutalized in tribal dominated West MP districts. The latest incident of stripping, assaulting and abduction of a married tribal woman by alleged lover happened in Jhabua district. @NewIndianXpress @TheMornStandard @santwana99 pic.twitter.com/KLL4qrJLQk
— Anuraag Singh (@anuraag_niebpl) August 12, 2022
அப்பெண் தன் கணவரிடம் திரும்பிய அடுத்த நாள், முகேஷ் கட்டாரா அப்பெண்ணைத் தேடி வந்து மீண்டும் அவரை தன்னுடன் கூட்டிச் செல்ல போராடியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே ஏற்பட்ட கைகலப்பில், கட்டாராவும் அவரது சில நபர்களும் இணைந்து அப்பெண்ணைத் தாக்கி அவரது ஆடைகளை வலுக்கட்டாயமாகக் கழற்றியுள்ளனர். மேலும் பெண்ணின் கணவரையும் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் அப்பெண்ணை மீட்டனர்.
இந்நிலையில், ரக்ஷா பந்தன் அதுவுமாக இப்படி நடந்துகொள்வது அவமானகரமானது மற்றும் மனிதத்துவம் அற்றது எனக்கூறியும் ஆளும் அரசைக் கண்டித்தும் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் கமல் நாத் ட்வீட் செய்துள்ளார்.
मध्यप्रदेश के झाबुआ में रक्षाबंधन वाले दिन एक महिला के साथ इस तरह का व्यवहार बेहद शर्मनाक , मानवीयता व इंसानियत को तार-तार करने वाला…
— Kamal Nath (@OfficeOfKNath) August 11, 2022
पता नहीं शिवराज सरकार में इस तरह का कृत्य करने वालों व क़ानून हाथ में लेने वालों के हौसले क्यों बुलंद है ? pic.twitter.com/p7uOKhJTIE
இச்சம்பவத்தில் ஈடுபட்ட கணவன் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடத்தல், குற்றவியல் மிரட்டல், கலவரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,
தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்