Allahabad HC update: பசுக்களை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்! - அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி!
நீதிபதி சேகர் குமார் யாதவ் ஒருபடி மேலே போய் பசுக்களுக்கான அடிப்படை உரிமை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் அரசு மசோதா நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்திய கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்த பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என அலஹாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பசுவதைத் தடைச் சட்டத்துக்குக் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம் தனது உத்தரவில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது. நீதிபதி சேகர் குமார் யாதவ் ஒருபடி மேலே போய் பசுக்களுக்கான அடிப்படை உரிமை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் அரசு மசோதா நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பசு செழிப்பாக இருந்தால் நாடு செழிப்பாக இருக்குமென்றும் அலகாபாத் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
"The work of cow protection is not only of one religion sect, but cow is the culture of India."
— Bar & Bench (@barandbench) September 1, 2021
- Allahabad High Court
Read full story: https://t.co/taMiRDt5iW
மேலும் இந்தியாவில் பல்வேறு நம்பிக்கைகள் உடையவர்கள் வசித்தாலும் இந்தியாவுக்கான அவர்களது எண்ணம் என்பது ஒன்றே ஒன்றுதான். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்வந்து இந்தியாவின் நம்பிக்கைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். மக்கள் ஒற்றுமையாக இல்லாத நிலையில் அது நாட்டை வலுவிழக்கச் செய்துவிடும். அரசு மாநிலம் எங்கும் கோசாலைகளை நிறுவியுள்ளது. ஆனால் அதில் பசுக்களை பார்த்துக் கொள்பவர்கள் யாருமில்லை. தனியார் கோசாலைகளும் பெயரளவிலேயே இயங்குகிறது’ என குற்றம் சாட்டியுள்ளது.