Covaxin Open Vial Policy: இனி வேஸ்ட் ஆகாது.. 28 நாட்கள் அப்படியே இருக்கும் - அப்டேட் ஆனது கோவாக்சின் மருந்து!
பாரத் பயோடெக் நிறுவனம், 2 முதல் 8°C டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்து 28 நாட்களுக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து பாட்டிலை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது
கொரோனா தடுப்பு மருந்து வீணாவதை தடுக்கும் பொருட்டு பாரத் பயோடெக் நிறுவனம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 28 நாட்கள் செல்லுபடியாகும் தடுப்பூசி கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக, ஒரு வயல் தடுப்பூசி என்பது ஒரு பாக்ஸ் மாதிரியானது. அதில் உள்ள மருந்துகள் மூலம் 10 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும். மேலும், தடுப்பு மருந்து குப்பியை திறந்த பிறகு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிலிருக்கும் தடுப்பு மருந்தை போட்டுவிட வேண்டும். இல்லையென்றால், தடுப்பு மருந்து வீணாகி விடும். இந்தியாவில், போடப்படும் அனைத்து தடுப்பூசிகளிலும் இந்த பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம், 2 முதல் 8°C டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்து 28 நாட்களுக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து குப்பியைப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கும், அரசுக்கும் புத்துர்ணாச்சி அளிக்கும் செய்தியாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக, ரசியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை பயன்படுத்த (-18) டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
62 லட்சம் தடுப்பூசி வீணாகியுள்ளது:
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 145.61 கோடிக்கும் மேற்பட்ட (1,45,61,51,715) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன. இதில், இதுவரை 137.67 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. 17.99 கோடிக்கும் மேற்பட்ட (17,99,80,556) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.
இதுநாள் வரையில், வீணான தடுப்பூசிகளின் எண்ணிக்கை 62 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டும் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான தடுப்பூசிசிகள் வீணடைக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி வீணாகும் எண்ணிக்கையில் நாட்டின் முதன்மை மாநிலக மத்திய பிரதேசம் விளங்குகிறது. அங்கு, இதுநாள் வரையில் 16. 48 தடுப்பூசி டோஸ்கள் வீணாக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் 12.60 லட்சம் தடுப்பூசி டோஸ்களும், ராஜஸ்தானில் 6.86 லட்சம் டோஸ்களும் வீனாகியுள்ளன. அசாம், ஜம்மு & காஷ்மீர், ஆந்திர பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, திரிபுரா, மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் வீணான தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனைகளின் வசம் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சமீபத்திய தரவுகளின் மூலம் அறியப்படுகிறது. இதில், 15 முதல் 20% வரையிலான தடுப்பூசிகள் இம்மாதத்துக்குள் காலாவதியாகும் என்று நம்பப்படுகிறது. எனவே, பயன்படுத்தப்படாமல் இருக்கும் தடுப்பூசிகள் காலாவதியாவதற்கு முன் அவற்றை இலவசமாக மக்களுக்கு செலுத்த தனியார் மருத்துவமனைகள் முடிவெடுத்து வருகின்றன.
TN Vaccine Wastage: இருப்பை விட அதிக தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதலிடம்!