மேலும் அறிய

Black Fungus | கொரோனாவால் தூண்டப்படும் பூஞ்சை தொற்று: டெல்லி மருத்துவமனை எச்சரிக்கை

கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த சிலருக்கு கருப்பு பூஞ்சை என்ற பூஞ்சை தொற்று தாக்குதலும் ஏற்படுவதாக டெல்லி மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து  ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 4.12 லட்சம், நேற்று 4.14  லட்சமாக இருந்த பாதிப்பு இன்று  4.10 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால், ஒருநாள் உயிரிழப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 81.77 சதவீதம் மற்றும் உயிரிழப்பு விகிதம் 1.10 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 37 லட்சத்து 23 ஆயிரத்து 446-ஆக உயர்ந்துள்ளது.


Black Fungus | கொரோனாவால் தூண்டப்படும் பூஞ்சை தொற்று: டெல்லி மருத்துவமனை எச்சரிக்கை

ஒரேநாளில் 78 ஆயிரத்து 282 பேர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 16 கோடியே 73 லட்சத்து 46 ஆயிரத்து 544 பேருக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த சிலருக்கு கருப்பு பூஞ்சை என்ற பூஞ்சை தொற்று தாக்குதலும் ஏற்படுவதாக டெல்லி மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட சிலருக்கு இந்த பூஞ்சை தொற்று ஏற்படுவதாகவும் இதனால் பார்வை குறைபாடு உண்டாகிறது எனவும் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.

டெல்லியில் நடப்பது என்ன?

டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனை பூஞ்சை தொற்று குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு பூஞ்சை தொற்று ஏற்படுவதாகவும் இரண்டு நாட்களில் 6 பேர் அதற்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர் முஞ்சால்,கொரோனாவால் இந்த பூஞ்சை தொற்று மேலும் வேகமெடுப்பதை பார்க்க முடிகிறது.இரண்டு நாட்களில் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த வருடமும் இந்த தொற்று பலரையும் பாதித்தது. பலருக்கு கண்பார்வை சிக்கலானது என்றார்.


Black Fungus | கொரோனாவால் தூண்டப்படும் பூஞ்சை தொற்று: டெல்லி மருத்துவமனை எச்சரிக்கை

பூஞ்சை தொற்று என்பது என்ன?

Mucormycisis என்ற ஒரு வகை பூஞ்சை தொற்று ஆகும். இது கொரோனா வைரசால் தூண்டப்படுகிறது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாள் படுக்கையிலேயே சிகிச்சையில் உள்ளவர்களுக்கு இந்த பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நோயாளிகளை எளிதில் கண்டுபிடித்து அவர்களை பூஞ்சை தொற்று பாதிக்கிறது. இது நுரையீரலை பாதிக்கிறது. அடிபட்ட காயங்கள், வெட்டுக்காயங்கள் மூலம் இந்த பூஞ்சை தொற்று உடலுக்குள் நுழைகிறது.

அறிகுறிகள் என்ன?

மூக்கு அடைப்பு, கண்கள் அல்லது கன்னங்களில் வீக்கம் போன்றவை இந்த பூஞ்சை தொற்றில் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதனை கவனிக்காமல் விட்டால் 15 நாட்களில் மூளையைத் தாக்கி இறப்புக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரொனா பாதித்து குணமடைந்தவர்களுக்கு இதுபோல அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உடலில் உள்ள திசுக்களை பரிசோதித்து பூஞ்சை தொற்றுக்கு எதிரான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்


Black Fungus | கொரோனாவால் தூண்டப்படும் பூஞ்சை தொற்று: டெல்லி மருத்துவமனை எச்சரிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை குறை வைக்கிறது இந்த பூஞ்சை தொற்று. குறிப்பாக கொரோனாவில் இருந்து  மீண்ட ஆனால் நீரிழிவு, சிறுநீரகம் அல்லது இதய செயலிழப்பு அல்லது புற்றுநோய் போன்ற பிற உடல்நிலை  பாதிப்பை கொண்டவர்களில் இந்த தொற்று பொதுவாகப் பாதிக்கிறது. 

 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Embed widget