உணவில் தொடங்கிய தகராறு! ஓனர் தம்பதியை கோடாரியால் வெட்டிக்கொன்ற உதவியாளர்! பகீர் சம்பவம்!
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உணவுக்காக ஏற்பட்ட சண்டையில், 40 வயது நபர் ஒருவர், தூங்கி கொண்டிருந்த தம்பதியை கோடாரியால் வெட்டிக் கொன்றுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உணவுக்காக ஏற்பட்ட சண்டையில், 40 வயது நபர் ஒருவர், தூங்கி கொண்டிருந்த தம்பதியை கோடாரியால் வெட்டிக் கொன்று, அவர்களின் மகளைக் கடுமையாகக் காயப்படுத்தி உள்ளார். இதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
Couple Axed To Death In Sleep By Domestic Help After Argument Over Food https://t.co/3ucAFINFfF
— Manjesh yadav (@manjesh94550579) September 7, 2022
கும்லா மாவட்டத்தில் உள்ள மஜ்கான் ஜம்டோலி கிராமத்தில் கொல்லப்பட்டவர்களின் வீட்டில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்த நபர், கைது செய்யப்பட்டார். உள்ளூர்வாசிகள் குற்றவாளியைப் பிடித்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திங்கள்கிழமை இரவு நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் மகன் காயமின்றி தப்பியதை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வீட்டின் உதவியாளர் கோடாரியை கொண்டு நடத்திய தாக்குதலில் தம்பதிகளான ரிச்சர்ட் மற்றும் மெலனி மின்ஸ் ஆகியோர் காயமடைந்து இறந்தனர். அதே நேரத்தில், அவர்களின் மகள் தெரசா ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
சத்யேந்திர லக்ரா என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், சில நாட்களுக்கு முன்பு உணவு தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் ரிச்சர்ட் மின்ஸுடன் சண்டையிட்டதாகவும், குடும்பத்தைத் தாக்க முடிவு செய்ததாகவும் காவல்துறை அலுவலர் ஒருவர் கொலை சம்பவத்தை விவரித்துள்ளார்.
A 40-year-old man allegedly axed a couple to death in their sleep and critically injured their daughter following a brawl over food in Jharkhand's Gumla district.
— NEWS REPORT TODAY (@NEWSREPORTTODA1) September 7, 2022
Tags #murder #couple #quarrel #news #newsportal #newsreporttoday pic.twitter.com/sCKUHXIb4p
வீட்டின் உரிமையாளர் தன்னைக் கொல்வதற்கு முன்பு, குடிபோதையில் குடும்பத்தைக் கொன்றதாக சத்யேந்திர லக்ரா வாக்குமூலம் அளித்துள்ளார். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் கைப்பற்றப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
உணவின் காரணமாக ஏற்பட்ட தகராறில் தூங்கி கொண்டிருந்த தம்பதியினரை வீட்டின் உதவியாளர் கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலையின் பின்னணி குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.