மேலும் அறிய

Mask Up : அய்யய்யோ.. உஷார் மக்களே.. கூட்டமான இடங்களில் மாஸ்க் அணியுங்கள்.. அரசு கொடுத்த முக்கிய அறிவிப்பு..

சீன மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.

சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.

அதன் தொடர்ச்சியாக, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று உயர்மட்ட அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கொரோனா நிலைமை குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

கூட்டத்தை தொடர்ந்து, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மன்சுக் மாண்டவியா, "கோவிட் இன்னும் முடிவடையவில்லை. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளாார்.

கொரோனா தேசிய பணிக்குழுவின் தலைவரும் நிதி ஆயோக் உறுப்பினருமான வி.கே.பால், கொரோனா நிலவரம் குறித்து பேசுகையில், "பீதி அடைய தேவையில்லை, போதுமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முகக்கவசம் அணியுமாறு கேட்டு கொள்கிறோம். சர்வதேச விமானப் பயணத்திற்கான வழிகாட்டுதல்களில் இன்னும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை" என்றார்.

மேலும், கொரோனா நிலவரம் குறித்து கண்காணிக்க வாராந்திர கூட்டம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. 

அதாவது, சர்வதேச மற்றும் உள்ளூர் விமான நிலையங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது குறித்து வியூகம் அமைப்பது, வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு புதிய விதிமுறைகள் விதிப்பது, உருமாறிய கொரோனா குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்வது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என தகவல் வெளியாகியிருந்தது.

அதேபோல, வெளிநாட்டில் இருந்து திரும்பும் இந்திய பயணிகள், நாட்டில் பரவும் கொரோனா வகை, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக எடுக்கப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது.

கொரோனா தொற்று உறுதி செய்த அனைவரின்  மாதிரிகளும் INSACOG மரபணு வரிசைமுறை ஆய்வகங்களுக்கு தினமும் அனுப்பப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்தியாவில் பரவும் கொரோனா வகை குறித்து ஆய்வு செய்யவும் கண்காணிக்கவும் சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பே INSACOG ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 112 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்களன்று 181 இல் இருந்து சற்று குறைந்து பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின்  எண்ணிக்கை தற்போது 3,490 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

கேரளாவில் இருந்து இரண்டு மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து ஒரு இறந்துள்ளனர். மொத்தம் 5,30,677 ஆக இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget