Coronavirus LIVE Updates: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய், குழந்தைக்கு தொடர்ந்து பாலூட்ட வேண்டும் - மகப்பேறு மருத்துவர்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39 ஆயிரத்து 361 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 35 ஆயிரத்து 968 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 461 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 189 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் 3 கோடியே 5 லட்சத்து 79 ஆயிரத்து 106 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் மேலும் 22,129 பேருக்கு கொரோனா
கேரள மாநிலத்தில் மேலும் 22,129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 156 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய், குழந்தைக்கு தொடர்ந்து பாலூட்ட வேண்டும் - மகப்பேறு மருத்துவர்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய், தனது குழந்தைக்கு தொடர்ந்து பாலூட்ட வேண்டும் என்றும், மற்ற நேரத்தில் குழந்தையை 6 அடி தூரம் தள்ளி வைத்திருக்க வேண்டும் எனவும் டாக்டர் மஞ்சு பூரி கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1,07,873 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன
தமிழ்நாடு முழுவதும் இதுவரை கர்ப்பிணி பெண்களுக்கு- 1,07,873 பேர்களுக்கும், மத்திய மண்டலத்தில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் 368 கொரானா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
இன்று புதுச்சேரியில் 113 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று : ஒருவர் உயிரழப்பு..!
இன்று புதுச்சேரியில் 113 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று : ஒருவர் உயிரழப்பு..!