Cow Hug Day: "மீம்ஸ் பார்த்து பயந்துட்டீங்களா?" மத்திய அரசை கலாய்த்த சசி தரூர்..! இதுதான் காரணம்..
பசு அணைப்பு தினத்தை திரும்ப பெற்ற மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கேலி செய்துள்ளார்.
சமூக ஊடகங்களில் நகைச்சுவைகள் மற்றும் மீம்ஸ்களின் வெள்ளத்திற்கு மத்தியில், கலாய்த்து தள்ளப்பட்ட அறிவிப்பான, காதலர் தினத்தன்று பசுவை கட்டிப்பிடிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட தனது முறையீட்டை விலங்குகள் நல வாரியம் நேற்று வாபஸ் பெற்ற நிலையில் அதனை கலாய்த்து காங்கிரஸ் தலைவர் சசி தரூர் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
பிப்ரவரி 14
காதலர் தினத்தை கொண்டாட பிப்ரவரி தொடங்கியதில் இருந்தே மக்கள் தயாராகி விட்டனர். ஏற்கனவே அதனை ஒட்டிய டெட்டி டே, பிராமிஸ் டே போன்ற பல தினங்கள் அனுசரிக்கப்பட்டுவிட்ட நிலையில் இளைஞர்கள் காதலர் தினக் கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிட்டனர். இந்த நிலையில், உலக அளவில் காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு கட்டிப்பிடிப்பு தினமாக நாம் கொண்டாடுவோம் என்ற இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அழைப்பு பெரும் விவாதப் பொருளாக மாறியது.
கலாச்சாரத்தை காப்போம்
மேற்கத்திய கலாச்சாரத்தின் முன்னேற்றம்" காரணமாக வேத மரபுகள் கிட்டத்தட்ட "அழிவின் விளிம்பில்" இருப்பதாகவும், பசுக்களைக் கட்டிப்பிடிப்பது உணர்ச்சிச் செழுமையையும், "தனிநபர் மற்றும் கூட்டு மகிழ்ச்சியையும்" அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முடிவு வாபஸ்
இந்த அறிக்கை பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பாக, நெட்டிசன்கள் பசு அரவணைப்பு தினத்தை கிண்டல் செய்து வீடியோ, மீம்ஸ் என சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த எதிர்ப்புகளாலோ என்னவோ, தற்போது அந்த முடிவை வாபஸ் பெற்று இந்திய விலகுங்கள் நல வாரியம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிவிப்பையும் பலர் கலாய்த்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் சசி தரூரும் கலாய்த்து உள்ளார்.
Was the Government cow-ed by the jokes made at its expense or was it merely cow-ardice? My guess is the original appeal was an oral instruction: “Valentine’s Day: let them hug their guy” & the last word was misheard by a HindiRashtravadi as gaay! pic.twitter.com/o7uPzBnlho
— Shashi Tharoor (@ShashiTharoor) February 11, 2023
சசி தரூர் ட்வீட்
அவரது ட்விட்டர் பக்கத்தில், 'பசு அரவணைப்பு தினம்' குறித்து நகைச்சுவையாக ட்வீட் செய்துள்ளார். "அவர்கள் தங்கள் விரும்பும் நபரை கட்டிப்பிடிக்கட்டும் (let them hug their guy)" அறிவுறுத்தல் "கே(gay)" என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் என்று அவர் கூறினார். "அரசாங்கம் தனது செலவில் தானே சூடு வைத்துக்கொண்டதாக நினைத்து, நகைச்சுவைகளால் துவண்டு போனதா அல்லது அது வெறுமனே முட்டாள்களை தூண்டிவிட்டதா? என் யூகம் என்னவென்றால், முதலில் அறிவிக்கப்பட்டது, ஒரு வாய்வழி அறிவுறுத்தலாகும், "காதலர் தினத்தன்று அவரவர் விரும்பும் நபரை (guy) கட்டிப்பிடியுங்கள்", என்று கூறியிருப்பார்கள். கடைசி வார்த்தையை இந்து தேசியவாதிகள் கே (gay) என்று தவறாகக் கேட்டிருப்பார்கள்" என்று சசி தரூர் ட்வீட் செய்துள்ளார்.