மேலும் அறிய

IND-W vs PAK-W : மகளிர் டி20 உலகக்கோப்பை: மந்தனா இல்லாமல் களம் இறங்கும் இந்தியா! பாகிஸ்தானை வெல்லுமா?

IND-W vs PAK-W : இந்திய மகளிர் அணியும் பாகிஸ்தான் மகளிர் அணியும் நாளை கேப்டவுனில் நேருக்கு நேர் மோதவுள்ளன.

2023ஆம் ஆண்டுக்கான மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நான்காவது போட்டியில் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 12) நடைபெறும் ஆட்டத்தில் இந்திய பெண்கள் (IND-W) பாகிஸ்தான் பெண்களை (PAK-W) எதிர்கொள்கிறது . இப்போட்டியில் பலமான இந்திய அணி தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். இந்திய மகளிர் அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2023ஆம் ஆண்டுக்கான  ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று பேட்டிங் பயிற்சியாளர் ஹிருஷிகேஷ் கனிட்கர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது மகளிர் T20I தரவரிசையில் உலகின் 4வது இடத்தில் உள்ள இந்திய மகளிர் அணி வங்காளதேசத்திற்கு எதிரான கடைசி பயிற்சி ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அந்த அணியினருக்கு அதிர்ச்சியாக உள்ளது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் அலியா ரியாஸின் ஆட்டம் மட்டும் தான் அந்த பயிற்சி ஆட்டத்தில் ஆறுதல் அளிக்கும் வகியில் இருந்தது.  அலியா ரியாஸ் 30 பந்துகளில் 48* ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். பிப்ரவரி 12-ம் தேதி இந்திய அணிக்கு எதிரான  போட்டியில் பாகிஸ்தானுக்கு ஆலியாவின் ஆட்டம் முக்கியமானதாக இருக்கும் எனலாம். 

IND-W vs PAK-W போட்டி விவரங்கள்:
இந்தியா பெண்கள் vs பாகிஸ்தான் பெண்கள், 4வது போட்டி, குரூப் பி, பெண்கள் டி20 உலகக் கோப்பை

இடம்: நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப்டவுன்

தேதி மற்றும் நேரம்: பிப்ரவரி 12, மாலை 6:30 IST

டெலிகாஸ்ட் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையதளத்திலும் ஒளிப்பரப்பாகவுள்ளது. 

பிட்ச் அறிக்கை:

தென்னாப்பிரிக்கா பெண்கள் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான T20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இந்த ஆடுகளம் மாறியது. சுழற்பந்து வீச்சுக்கு வரும்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுமே சம பலத்தில் உள்ளன, மேலும் இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்யும் அணி அதிக ஸ்கோரை எட்டுவது சாத்தியமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

IND-W vs PAK-W சாத்தியமான விளையாடும் வீராங்கனைகள் 
இந்திய வீராங்கானிகள் (IND-W):

யாஸ்திகா பாட்டியா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர், பூஜா வஸ்த்ரகர், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ரேணுகா தாக்கூர், ராதா யாதவ், ஷிகா பாண்டே

பாகிஸ்தான் வீராங்கனைகள் (PAK-W):

முனீபா அலி, சித்ரா அமீன், பிஸ்மா மரூஃப், நிதா தார், ஆயிஷா நசீம், அலியா ரியாஸ், ஒமைமா சொஹைல், கைனத் இம்தியாஸ், பாத்திமா சனா, துபா ஹாசன், நஷ்ரா சந்து

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

3 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு பெண்ணின் நண்பரால் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது - உபியில் பகீர்!
3 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு பெண்ணின் நண்பரால் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது - உபியில் பகீர்!
EVA Solar Car: 80 பைசாவுக்கு 1 கிமீ பயணம், வெறும் ரூ.3 லட்சம் தொடக்க விலை - நாட்டின் முதல் சோலார் கார், அம்சங்கள் என்ன?
EVA Solar Car: 80 பைசாவுக்கு 1 கிமீ பயணம், வெறும் ரூ.3 லட்சம் தொடக்க விலை - நாட்டின் முதல் சோலார் கார், அம்சங்கள் என்ன?
அரபு, கொரிய மொழிகளில் திராவிட வரலாறு! - உதயநிதி பகிர்ந்த மூன்று புத்தகங்கள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!
அரபு, கொரிய மொழிகளில் திராவிட வரலாறு! - உதயநிதி பகிர்ந்த மூன்று புத்தகங்கள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!
மனைவியை கூட்டி வரக்கூடாதா? - கேள்வி கேட்ட பத்திரிகையாளர்: டென்சனான ரோகித் சர்மா!
மனைவியை கூட்டி வரக்கூடாதா? - கேள்வி கேட்ட பத்திரிகையாளர்: டென்சனான ரோகித் சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
3 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு பெண்ணின் நண்பரால் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது - உபியில் பகீர்!
3 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு பெண்ணின் நண்பரால் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது - உபியில் பகீர்!
EVA Solar Car: 80 பைசாவுக்கு 1 கிமீ பயணம், வெறும் ரூ.3 லட்சம் தொடக்க விலை - நாட்டின் முதல் சோலார் கார், அம்சங்கள் என்ன?
EVA Solar Car: 80 பைசாவுக்கு 1 கிமீ பயணம், வெறும் ரூ.3 லட்சம் தொடக்க விலை - நாட்டின் முதல் சோலார் கார், அம்சங்கள் என்ன?
அரபு, கொரிய மொழிகளில் திராவிட வரலாறு! - உதயநிதி பகிர்ந்த மூன்று புத்தகங்கள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!
அரபு, கொரிய மொழிகளில் திராவிட வரலாறு! - உதயநிதி பகிர்ந்த மூன்று புத்தகங்கள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!
மனைவியை கூட்டி வரக்கூடாதா? - கேள்வி கேட்ட பத்திரிகையாளர்: டென்சனான ரோகித் சர்மா!
மனைவியை கூட்டி வரக்கூடாதா? - கேள்வி கேட்ட பத்திரிகையாளர்: டென்சனான ரோகித் சர்மா!
இன்பநிதியின் நண்பர்களுக்காக தனது இருக்கையை கலெக்டர் விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு - அண்ணாமலை
இன்பநிதியின் நண்பர்களுக்காக தனது இருக்கையை கலெக்டர் விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு - அண்ணாமலை
Tamilnadu Roundup: குவியும் ரேஷன் கார்ட் விண்ணப்பங்கள், 13 அமாவசைகள், துக்ளக் அட்டாக் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup: குவியும் ரேஷன் கார்ட் விண்ணப்பங்கள், 13 அமாவசைகள், துக்ளக் அட்டாக் - தமிழ்நாட்டில் இதுவரை
EPFO Update: 7.5 கோடி ஈபிஎஃப்ஒ பயனாளர்களே..! வந்தது அதிரடியான 2 அப்டேட்கள், இனி எல்லாமே ஈசிதான், பணப்பரிமாற்றம்..
EPFO Update: 7.5 கோடி ஈபிஎஃப்ஒ பயனாளர்களே..! வந்தது அதிரடியான 2 அப்டேட்கள், இனி எல்லாமே ஈசிதான், பணப்பரிமாற்றம்..
Mahila Udyam Nidhi Scheme: தாய்மார்களே..! ரூ.10 லட்சம் வரை கடன், வட்டி இவ்ளோ தானா? 30% மானியம்? யாருக்கெல்லாம்?
Mahila Udyam Nidhi Scheme: தாய்மார்களே..! ரூ.10 லட்சம் வரை கடன், வட்டி இவ்ளோ தானா? 30% மானியம்? யாருக்கெல்லாம்?
Embed widget