மேலும் அறிய

Former CM Rosaiah Profile: எம்.எல்.ஏ-அமைச்சர்-எம்.பி-முதல்வர்-ஆளுநர்... ஆந்திராவின் ‛கெட்டி’ கொனிஜெட்டி ரோசய்யா!

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வேமுருவில் ஜூலை 1933 இல் பிறந்த இவர், குண்டூர் இந்துக் கல்லூரியில் மாணவப் பருவத்தில் இருந்தே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

2011 - 2016 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்த ரோசய்யா, அதற்கு முன்பாக ஆந்திராவின் முதலமைச்சராக ஓராண்டு பதவி வகித்தார். ஓய். எஸ்.ராஜசேகர் ரெட்டி முதலமைச்சர் பதவியில் இருக்கும்போது, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததால், 2009ஆம் ஆண்டு முதல் 2010 வரை ஆந்திராவின் முதலமைச்சராக பதவி வகித்தார்.

இவர், 1979ஆம் முதல் தொடர்ந்து காங்கிரஸ் அரசாங்கங்களில் அமைச்சராக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார். எந்த சர்ச்சைகளிலும் சிக்காத தலைவர் என்ற பெயரை பெற்றுள்ள ரோசய்யா, ஆந்திராவின் பல்வேறு முதலமைச்சர்களின் கீழ் பல்வேறு துறைகளை வகித்துள்ளார். ஆனால் அவர் நிதி அமைச்சராக மிகவும் பிரபலமானவர். அவர், சட்டசபையில் 15 பட்ஜெட்களை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வேமுருவில் ஜூலை 1933 இல் பிறந்த இவர், குண்டூர் இந்துக் கல்லூரியில் மாணவப் பருவத்தில் இருந்தே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

Former CM Rosaiah Profile: எம்.எல்.ஏ-அமைச்சர்-எம்.பி-முதல்வர்-ஆளுநர்... ஆந்திராவின் ‛கெட்டி’ கொனிஜெட்டி ரோசய்யா!

ரோசய்யா, மறைந்த நாடாளுமன்ற உறுப்பினரும் விவசாயிகளின் தலைவருமான பேராசிரியர் என் ஜி ரங்காவின் நெருங்கிய சீடராக இருந்தார். வைஷ்ய சமூகத்தைச் சேர்ந்த ரோசய்யா, 1968, 1974 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும், 1979 இல் மரி சன்னா ரெட்டியின் கீழ் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் அமைச்சராகவும் இருந்தார்.

அதன்பிறகு, டி அஞ்சய்யா, கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி, என் ஜனார்த்தன ரெட்டி ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய ரோசய்யா, மே 2004 முதல் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார். அவர் உள்துறை, சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளை வகித்தார். .

அவர் 1995 மற்றும் 1997 க்கு இடையில் ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பணியாற்றினார் மற்றும் 1998 இல் நர்சராவ்பேட்டையில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆந்திரப் பல்கலைக்கழகம் 2007 இல் ரோசய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிய சிறப்பபித்துள்ளது. ரோசய்யாவின் மனைவி பெயர் சிவலட்சுமி. இவர்களுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

ரோசய்யா கடைசியாக வகித்த பதவி தமிழ்நாடு ஆளுநர். 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் பதவி விலகிய பிறகு, தனக்கு தீவிர அரசியலுக்கு திரும்புவதில் விருப்பமில்லை என்று கூறினார்.

அப்போது சென்னையில் அவர் அளித்த பேட்டியில், 60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைக்கு  பிறகு தற்போது ஓய்வு பெறப் போவதாகவும், ஹைதராபாத்திற்கு திரும்பி அமைதியான, ஓய்வுபெற்ற வாழ்க்கையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

ரோசய்யா வகித்த பதவிகள்:

1968, 1974 மற்றும் 1980 ஆந்திர மாநில சட்டப்பேரவை
1977-1979 ஆந்திர மாநிலம் தொழில்துறை உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர்.
1978-1979, 1983-1985 ஆந்திர மாநில சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர்.
1979-1980 ஆந்திர மாநில சாலை மற்றும் கட்டிடத்துறை அமைச்சர்.
1980-1981 ஆந்திர மாநில வீட்டு வசதி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்.
1982-1983 ஆந்திர மாநில உள்துறை அமைச்சராக இருந்தார்.
1989-1990 ஆந்திர மாநில நிதி, மின்சாரம், போக்குவரத்து, உயர்கல்வி, கைத்தறி மற்றும் கதர்துறை, அமைச்சர்.
1991-1992 ஆந்திர மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.
1992-1994 ஆந்திர மாநில நிதி, மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.
1995-1997 ஆந்திரமாநிலம் காங்கிரஸ் கட்சித் தலைவர்.
1998 நரசரொபேட் மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.
2004-2009 ஆந்திர மாநில நிதி, திட்டம், குடும்ப நலத்துறை அமைச்சர்.
2009-2010 ஆந்திர மாநில முதல்வர்.
2011-2016 தமிழ்நாடு ஆளுநர்

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget