புதுச்சேரியை புறக்கணிக்கும் நடிகர்கள்...!- படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க புதுவை மக்கள் எதிர்ப்பு..!
புதுச்சேரியில் படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்கக்கோரி, நடிகர் விஜய் சேதுபதி கோரியதற்கு முதல்வர் ரங்கசாமி மவுனம் காத்து விட்டு, வழக்கம் போல் பரிசீலிப்பதாக குறிப்பிட்டார்
புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்துவதற்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் என்.ரங்கசாமியை நடிகர் விஜய் சேதுபதி சந்தித்து கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு புதுச்சேரி பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் கொரோன பரவல் குறைந்ததால், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நூறு பேருடன் நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது. தற்போது, தமிழ், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. அதே போல், தொலைக்காட்சி, விளம்பர படப்பிடிப்புகளும் நடைப்பெற்று வருகின்றன. 'காத்துவாக்குல காதல்' பட பிடிப்புக்காக புதுச்சேரிக்கு வந்த நடிகர் விஜய்சேதுபதி கடந்த ஆகஸ்ட் 19ஆம் இரவு முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது புதுச்சேரியில் திரைப்பட படப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு கட்டணமாக ரூபாய் 5 ஆயிரம் மட்டுமே முன்பு வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது 28 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் திரைப்பட படிப்படிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி கோரினார். அதற்கு முதல்வர் ரங்கசாமி அமைதியாக இருந்தார். தொடர்ந்து அவருடன் வந்தோரும் இந்த கோரிக்கையை குறிப்பிட்டதால் வழக்கம் போல் பரிசீலிப்பதாக குறிப்பிட்டார்.
Koozhangal movie : ராம் நடத்தி வைத்த சாதி மறுப்பு திருமணம்..வலுக்கும் எதிர்ப்பு
இந்த நிலையில் புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணங்களை குறைக்க கூடாது என எதிப்புகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக, புதுச்சேரி ஐந்தாவது தூண் மக்கள் இயக்கம் நிறுவனர் சக்திவேல் கூறியதாவது,
புதுச்சேரியில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நிவாரண தொகையை பல்வேறு தரப்பினர் அரசிடம் வழங்கினர். ஓய்வூதியம் வாங்குவோர் தொடங்கி சிறு குழந்தைகள் வரை பலரும் தங்களால் இயன்ற உதவியை தந்தனர். புதுச்சேரியில் தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் தொடங்கி, பலரும் கொரோன காலத்தில் பலரும் உணவு தொடங்கி பல மருத்துவ சாதனங்களை தந்தனர்.
கடந்த 15 வருடங்களாக படப்பிடிப்பிற்கான வரி விதிப்பு ரூபாய் 5 ஆயிரம் மட்டுமே இருந்தது கொரோனா காலகட்டத்திற்குப் பின்பு புதுச்சேரி அரசு ரூபாய் 28 ஆயிரம் நாளொன்றுக்கு வரி விதித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் படப்பிடிப்பின் போது புதுச்சேரியை சார்ந்த ஒருவருக்கும் வாய்ப்பு வழங்குவதில்லை என கூறினார். தனியார் நிறுவனங்களில் படப்பிடிப்பிற்கு நாளொன்றுக்கு ரூபாய் 50 லட்சம் வரை செலவு செய்யும் திரைத்துறையினர், புதுச்சேரியில் ரூபாய் 28000 செலவு செய்வதில் என்ன தயக்கம் என சக்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா காலத்தில் புதுச்சேரி அரசுக்கு நடிகர் விஜய் மட்டுமே 5 லட்சம் நிதி உதவி அளித்தார். அவரை தவிர மற்ற நடிகர்களோ அல்லது திரைத்துறையை சார்ந்தவர்கள் யாரும் புதுச்சேரி அரசுக்கு நிவாரணமோ, உதவியோ தரவில்லை. தற்போது நிதி நெருக்கடியில் புதுச்சேரி உள்ள சூழலில் பலவித வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிக வருவாய் ஈட்டும் திரைத்துறையினர் நாள் கட்டணத்தை குறைக்க சொல்வதை ஏற்க முடியாது. அதனால் தான் முதல்வர் உறுதி தரவில்லை" என்று என்றார்.
No 319... ஏன் பதறுது எடப்பாடி...? - SPL உடைக்கும் கோடநாடு மர்மங்கள் | SPL Interview