மேலும் அறிய

மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்.. சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்.. பதற்றம்!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் மகாராஷ்டிராவின் சதாராவைச் சேர்ந்த அமர் பன்வார், ஆந்திராவின் கடப்பாவைச் சேர்ந்த கே. ராஜேஷ் ஆகிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், இரண்டு காவல்துறை அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்த இருவரும், இந்தோ-திபெத்திய எல்லை காவல்படையை சேர்ந்தவர்கள்.

இன்று நண்பகல் அளவில், இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மற்றும் மாவட்ட ரிசர்வ் காவல் படை இணைந்து துர்பேடாவில் சோதனை நடத்தினர். சோதனை நடத்திவிட்டு, நாராயண்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அபுஜ்மத் பகுதியில் உள்ள கொட்லியார் கிராமத்திற்கு அருகே ஐஇடி குண்டு வெடித்தது.

மாவோயிஸ்ட்கள் தாக்குதல்:

இதில், இந்தோ-திபெத்திய எல்லை காவல்படையை சேர்ந்த மகாராஷ்டிராவின் சதாராவைச் சேர்ந்த அமர் பன்வார் மற்றும் ஆந்திராவின் கடப்பாவைச் சேர்ந்த கே. ராஜேஷ் கொல்லப்பட்டனர். இருவருக்கும் 36 வயதாகிறது.  தாக்குதலில் அடைந்த காயமடைந்த நாராயண்பூர் காவல்துறையைச் சேர்ந்த இரண்டு காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் நிலையாக இருப்பதாக கூறப்படுகிறது.

சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு காலத்தில் நக்சல் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில், நக்சல் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. 

குறிப்பாக, கடந்த 9 ஆண்டுகளில், (நக்சல்) வன்முறை சம்பவங்கள் 52 சதவீதம் குறைந்துள்ளது. இறப்புகள் (மாவோயிஸ்ட் வன்முறையில்) 70 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களின் இறப்பு 68 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், நக்சல்களால் பாதிக்கப்பட்ட (எண்ணிக்கை) மாவட்டங்கள் 62 சதவீதம் குறைந்துள்ளன. இருப்பினும், சில பகுதிகளில் அவ்வப்போது நக்சல் தாக்குதல் நடந்து வருகிறது.

நடந்தது என்ன?

இப்படிப்பட்ட சூழலில், கொட்லியார் கிராமத்தில் மாவோயிஸ்ட் தாக்குதல் நடந்துள்ளது. சமீபத்தில் கூட, ஜார்க்கண்ட் சத்ரா மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரிகள் இருவர் வீர மரணம் அடைந்தனர்.

இந்தாண்டு தொடக்கத்தில், நக்சல்களின் கோட்டை என கருதப்படும் சுக்மா மாவட்டத்தின் வனப்பகுதியில் இரண்டு போலீஸ் முகாம்களை பாதுகாப்புப் படையினர் அமைத்தனர். இதை தொடர்ந்து, குடியரசு தினத்தன்று, சுக்மா-பிஜப்பூர் பகுதியில் முதன்முறையாக இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

கடந்த நாற்பது ஆண்டுகளிலேயே 2022ஆம் ஆண்டுதான், நக்சல்களால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மிகக் குறைவான வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளது. இறப்புகள் பதிவாகியுள்ளது. நக்சலிசம் மனித குலத்திற்கு ஒரு சாபக்கேடு. அதன் அனைத்து வடிவங்களிலும் அதை வேரோடு பிடுங்குவதில் நாம் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget