மேலும் அறிய

கொடூர கொலை... மனைவியின் உடலை வெட்டி தண்ணீர் தொட்டியில் போட்ட நபர்... சத்தீஸ்கரில் அதிர்ச்சி..!

பிலாஸ்பூர் உஸ்லாபூர் பகுதியில் மனைவியை கொலை செய்து, அவரின் உடலை பல பாகங்களாக வெட்டி வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாகவே, நாட்டில் குடும்ப வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உறவினர்களாலும் தெரிந்த நபர்களாலும் பெண்கள் மீது நடத்தப்படும் மோசமான வன்முறை சம்பவங்கள் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், டெல்லியில் நடந்த கொலை வழக்கு நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

அதிர்வலைகளை ஏற்படுத்திய ஷ்ரத்தா கொலை:

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் மனதை பதற வைத்தது. 

இந்நிலையில், சத்தீஸ்கரில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. பிலாஸ்பூர் உஸ்லாபூர் பகுதியில் மனைவியை கொலை செய்து, அவரின் உடலை பல பாகங்களாக வெட்டி வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சத்தீஸ்கரில் ஷாக்:

இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ள நிலையில், அந்த நபரை காவல்துறை கைது செய்துள்ளது. அந்த நபரின் பெயர் பவன் தாக்கூர். சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் மனைவி வேறு நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது, தண்ணீர் தொட்டியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறைந்தது 1-2 மாதங்களுக்கு முன்பு சடலம் அங்கு வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

ஃப்ரிட்ஜ் கொலை வழக்கு:

டெல்லியில் நடந்த மற்றொரு கொலை வழக்கும் சமீபத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. ஷ்ரத்தா கொலை வழக்கைப் போன்று, 24 வயதான சாஹில் கெலாட், தனது காதலியைக் கொலை செய்து அதை மறைக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்டார். காதலி நிக்கி யாதவை வாக்குவாதத்திற்குப் பிறகு கொலை செய்துள்ளார். 

மேலும், தன்னுடைய குடும்பத்தினருக்கு சொந்தமான உணவகத்தில் உள்ள குளிர்சாதன பெட்டியில் உடலை மறைத்து வைக்க முடிவு செய்திருக்கிறார். கொலை நடந்த அதே நாளில் சாஹில் கெலாட், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு சென்று பல நாள்கள் கழித்துதான், சாஹிலுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது காதலி நிக்கிக்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, சாஹிலுடன் சண்டையிட்டுள்ளார் நிக்கி. அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் உச்சக்கட்டமாக, நிக்கியை கழுத்தை நெரித்து கொலை செய்து சொந்தமான உணவகத்தில் உள்ள குளிர்சாதன பெட்டியில் மறைத்துள்ளார்.

நிக்கியும் சாஹலும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் போது சந்தித்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர். இந்த கொலை பெரும் விவாத பொருளை கிளப்பிய நிலையில், சாஹிலுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அவரது தந்தை சுனில் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget