Project Tiger: பிரதமர் பிறந்தநாள்: 74 ஆண்டுகளுக்கு பிறகு நமீபியாவிலிருந்து ம.பி வரும் சிறுத்தைகள்!
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று (நாளை) பூங்காவின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறுத்தைகளை விடுவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 74 ஆண்டுகளுக்கு பிறகு, ஆப்பிரிக்க நாடாக நமீபியாவில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் குனோ-பால்பூர் தேசிய பூங்காவிற்கு 8 சிறுத்தைகள் நாளை கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள் எண்ணிக்கையை உயர்த்த வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எட்டு சிறுத்தைகளில் இரண்டு சிறுத்தைகளை பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று (நாளை) பூங்காவின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் விடுவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள நம்பியா(Namibia) நாடும் இந்தியாவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிறுத்தைகளை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (memorandum of understanding (MoU) ) கையெடுத்திட்டுள்ளன. இதன்படி, வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) உள்ள குனோ தேசியப் பூங்காவிற்கு(Kuno National Park) சிறுத்தை அழைத்துவரப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
#WATCH | "India has prepared the Kuno National park for the reintroduction of Cheetahs for several years," says SP Yadav, Chief of Project Cheetah as he details the preparations made by the government pic.twitter.com/GcnNYaUWeH
— ANI (@ANI) September 16, 2022
Satellite radio collars have been put on each Cheetah for their geolocation updates which will be monitored. Each Cheetah will also be given a dedicated monitoring team which will monitor it, patrol it, update us with any of its movements: SP Yadav
— ANI (@ANI) September 16, 2022
( First look of Cheetahs) pic.twitter.com/WPQb63LVr9
#WATCH | First look of Cheetahs that will be brought from Namibia to India on 17th September at KUNO National Park, in Madhya Pradesh pic.twitter.com/HOjexYWtE6
— ANI (@ANI) September 16, 2022
இத்தோடு, ஆண்டுதோறும் 8 முதல் 10 சிறுத்தைகளை கொண்டு வருவதன் மூலம், 5 ஆண்டுகளில் 50 என்ற எண்ணிக்கையை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சிறுத்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் சுமாா் 7,000 சிறுத்தைப் புலிகளே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க காடுகளிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கறுப்பு நிறப் புள்ளிகள் உடல் முழுவதும் நிரம்பியிருக்க, அதிக வெப்பத்திலிருந்து கண்களைக் காக்க, எப்போதும் கண்ணீர் வழிவது போன்ற கறுப்பு நிறக் கோடுகளுடன் கூடிய மெலிதான உருவ அமைப்பு கொண்டது சிறுத்தைகள். மணிக்கு 70 மைல் (112 கிமீ) வேகத்தில் ஓடக்கூடிய திறன் வாய்ந்த பூனை வகையைச் சேர்ந்த விலங்கு, சிறுத்தை, இதுவும் புலியைப் போலவே பதுங்கிப் பாய்ந்து உணவை வேட்டையாடும் பழக்கமுடையது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து பல மைல்கள் கடந்து ஐந்து ஆண் மற்றும் மூன்று பெண் என மொத்தம் எட்டு சிறுத்தைகள் அழைத்துவரபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.