(Source: ECI/ABP News/ABP Majha)
Tirupati Laddu Row: திருப்பதி லட்டு விவகாரம்; சனாதனத்தை காப்பாத்தணும்.. பவன் கல்யாண் போட்ட குண்டு
Tirupati Laddu Row:திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ஆந்திர அமைச்சர் பவன் கல்யாண் விமர்சனம் செய்துள்ளது பற்றி விரிவாக காணலாம்.
திருப்பதில் கோயிலில் வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது குறித்த ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆந்திர அமைச்சர் பவன் கல்யாண் திருப்பதி திருமலை தேவஸ்தானம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
திருப்பதில் கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் விலங்குகளில் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு தகவல்கல் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் இதற்கு முன் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான் அரசு திருமலை லட்டு பிரசாதத்தின் புனிதத்தன்மையில் சமரசம் செய்துவிட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார்.
திருமலை லட்டுகள், சுத்தமான நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தி கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் நந்தினி பிராண்ட் உடனான ஒப்பந்தம் ஓராண்டிற்கு முன்பு முடித்துக்கொள்ளப்பட்டது. அப்படியானல், லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதற்கும் நந்தினி பிராண்ட் நெய் பயன்பாடு நிறுத்தப்பட்டத்தற்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்திரபாபு நாயுடு விமர்சனம் செய்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (Tirumala Tirupati Devasthanams (TTD)) ஓவ்வொரு ஆறு மாதமும் லட்டு தயாரிப்பதற்கான நெய் வாங்குதற்கு டெண்டர் அறிவிக்கப்படும். அதன் மூலம் ஒவ்வ்வொரு ஆண்டும் 5 லட்சம் கிலோ நெய் வாங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
We are all deeply disturbed with the findings of animal fat (fish oil,pork fat and beef fat )mixed in Tirupathi Balaji Prasad. Many questions to be answered by the TTD board constituted by YCP Govt then. Our Govt is committed to take stringent action possible.
— Pawan Kalyan (@PawanKalyan) September 20, 2024
But,this throws… https://t.co/SA4DCPZDHy
நந்தினி பிராண்ட் நெய் நிறுத்தப்பட்ட காரணம் என்ன?
ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு கடந்தாண்டு 15 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த நந்தினி பிராண்ட் நெய் வழங்கும் Karnataka Milk Federation நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நிறுத்தியது. அப்போது விலை அதிகரிப்பு தொடர்பாக சிக்கல் ஏற்பட்டால் ஒப்பந்தம் முடித்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நந்தினி நெய் நிறுத்தப்பட்டதற்கும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலுக்கும் தொடர்பு உண்டா என்றும் பேசப்பட்டு வருகிறது.
துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கடும் விசமர்சனம்
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர பிரதேசத்தின் துணை முதலமைச்சரான பவன் கல்யாண் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில்,”திருப்பதியில் லட்டில் விலங்குகளில் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் நடந்தவை குறித்து திருமலை திருப்பது தேவஸ்தானம் பதில் சொல்லவேண்டிய கடமை இருக்கிறது. எங்கள் அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும். திருப்பதி கோயிலில் உள்ள மற்ற விவகாரங்களை கவனிக்க இருக்கிறோம்.
லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது கோவில்களை இழிவுபடுத்துவது, அதன் நிலப் பிரச்சினைகள் மற்றும் பிற தர்ம நடைமுறைகளைச் சுற்றியுள்ள பல சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
நாடு முழுவதும் உள்ள கோயில்களில் நடக்கும் பிரச்சனைகளை விசாரணை செய்ய தேசிய அளவிலான ‘Sanatana Dharma Rakshana Board’ என்ற அமைப்பை உருவாக்கும் நேரம் வந்திருக்கிறது போல..” என்று தெரிவித்துள்ளார்.