(Source: ECI/ABP News/ABP Majha)
Chandrayaan 3: வெற்றி..வெற்றி..வெற்றி..நிலவின் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ
லேண்டர் தரையிறங்கும் போது சந்திரயான் - 3 எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தகவல் தொடர்பு மையம் மற்றும் சந்திரயான்-3 லேண்டர் ஆகியவைக்கு இடையே தொலைத்தொடர்பு இணைப்பு நிறுவப்பட்டுள்ளது.
நிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 40 நாட்கள் பயண திட்டத்தின்படி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி சரியாக மாலை 6.04 மணிக்கு லேண்டரை இஸ்ரோ தரையிறக்கியது. இதன் மூலம், நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தின் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அதுமட்டும் இன்றி, இதற்கு முன்னதாக, மூன்று நாடுகள் மட்டுமே நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி வெற்றிகரமாக தரையிறக்கம் செய்துள்ளது.
நிலவின் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ:
அமெரிக்க, சோவியத் ஒன்றியம் (தற்போது ரஷியா), சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து அந்த பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தகவல் தொடர்பு மையம் மற்றும் சந்திரயான்-3 லேண்டர் ஆகியவைக்கு இடையே தொலைத்தொடர்பு இணைப்பு நிறுவப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, நிலவில் லேண்டர் தரையிறங்கும் போது சந்திரயான் - 3 எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "இந்த சாதனைக்காக இஸ்ரோ, அதன் விஞ்ஞானிகளை மனதார வாழ்த்துகிறேன். நான் தென்னாப்பிரிக்காவில் இருக்கலாம். ஆனால், என் இதயம் எப்போதும் சந்திரயான் திட்டத்துடன்தான் இருக்கிறது. இது, ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் கிடைத்த வெற்றி. நிலவுக்கு மனிதனை அனுப்புவதுதான் அடுத்தகட்டத் திட்டம். சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 விண்கலம் விரைவில் அனுப்பப்படும்'' என்றார்.
சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் வகையில் ஆதித்யா எல்1 திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் வெள்ளிக்கு விண்கலம் அனுப்பும் திட்டமும் இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்.இந்த தருணத்திற்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 23, 2023
The image captured by the
Landing Imager Camera
after the landing.
It shows a portion of Chandrayaan-3's landing site. Seen also is a leg and its accompanying shadow.
Chandrayaan-3 chose a relatively flat region on the lunar surface 🙂… pic.twitter.com/xi7RVz5UvW