மேலும் அறிய

LPG Cylinder Price: மக்களே ஹேப்பி நியூஸ்...சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைகிறதா? மத்திய அரசு ஜாக்பாட் அறிவிப்பு

ஆகஸ்ட் 30ம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

LPG Cylinder Price: ஆகஸ்ட் 30ம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

எதன் அடிப்படையில் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது?

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை  ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசால் நிர்ணயிக்கப்படும். ஏற்கெனவே, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டது. இதையடுத்து,  வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் தொடர்ந்து மாற்றம் எதுவும் செய்யப்படாமல் உள்ளது.  ஆனால், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், பாரத் ராஷ்டிர சமிதி ஆளும் தெலங்கானா மாநிலங்களில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து, அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதனையொட்டி மத்திய அரசு சமையல் ஏரிவாயு சிலிண்டரை குறைக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

குறையுமா கேஸ் சிலிண்டர் விலை?

கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு, உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை நிலையாக இருந்து வருகிறது. அவ்வபோது வணிக சிலிண்டர்களின் விலை மட்டுமே அவ்வபோது மாற்றமடைந்து கொண்டு வந்தது. தற்போதைய நிலவரப்படி, சமையல் ஏரிவாயு சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.1,053 ஆகவும், மும்பையில் ரூ.1,052.50 ஆகவும், சென்னையில் ரூ.1,068.50, கொல்கத்தாவில் 1,079 ரூபாயகவும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 30ம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், சமையல் ஏரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு நிம்மதி அளித்துள்ளது. 

வணிக சிலிண்டரின் விலை எவ்வளவு?

சமையல் ஏரிவாயு சிலிண்டர் விலை நிலையாக இருக்கும் நிலையில், வணிக சிலிண்டர்களின் விலை மட்டுமே அவ்வபோது மாற்றமடைந்து கொண்டு வந்தது. அதன்படி, ஏப்ரல் 1 ஆம் தேதி 2,192.50 ஆக இருந்த கேஸ் சிலிண்டர் விலை கடந்த மே மாதம் 1ம் தேதி 171 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.2021.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து,  கடந்த ஜூன் மாதம் 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 84.50 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், ஜுலை மாத, வணிக சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்ந்தது. அதன்பின், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.99.75 குறைக்கப்பட்டு தற்போது 1,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Embed widget