மேலும் அறிய

Dengue Fever: அதிவேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்; தடுக்க இதையெல்லாம் செய்யுங்கள் -மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

டெங்கு காய்ச்சல் பரவுவலை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டம்:

இந்தியாவில் டெங்கு காய்ச்சல் நிலைமை மற்றும் டெங்கு பாதிப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில்,  டெங்குவைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதற்கான பொது சுகாதார அமைப்பின் தயார்நிலை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதிலும், முழுமையாக தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

வழிகாட்டுதலை கடைபிடியுங்கள்:

கூட்டத்தில் பேசிய அமைச்சர், “பரிசோதனைக்கான ஸ்கிரீனிங் கருவிகளுக்கு மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. ஃபோகிங் மற்றும் IEC நடவடிக்கைகளுக்கும் நிதி உதவி அளித்துள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் கீழ்க்கண்ட நடவடிக்கைகளுக்காக மத்திய அரசின் திட்ட அமலாக்கத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு போதுமான நிதி வழங்கப்படுவதாகவும் மத்திய சுகாதார அமைச்சர் கூறினார்.

  1. கண்காணிப்பு - நோய் மற்றும் பூச்சியியல் கண்காணிப்பு
  2. பாதிப்பு தொடர்பான மேலாண்மை - பாதிப்புகளை திறம்பட நிர்வகித்தல் மற்றும் இறப்புகளைத் தடுக்கும்
  3. ஆய்வக நோயறிதல் - பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிவதற்காக ELISA அடிப்படையிலான NS1 ஆன்டிஜென் சோதனைக் கருவி (1kit=96 சோதனை) வாங்குதல். (IgM டெஸ்ட் கிட் NIV புனே மூலம் மத்திய விநியோகம்)
  4. திசையன் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை- உள்நாட்டு இனப்பெருக்கம் சரிபார்ப்பவர்கள் (DBCs) மற்றும் ASHA ஆகியவற்றின் திசையன் இனப்பெருக்கம் மற்றும் மூலக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அகற்ற மூடுபனி இயந்திரங்களை வாங்குவதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  5. பூச்சிக்கொல்லிகள்: பூச்சிக்கொல்லிகளை கொள்முதல் செய்தல் (புழுக்கொல்லிகள் மற்றும் வயதுவந்த கொல்லிகள்)
  6. திறன் மேம்பாடு- பயிற்சி, மனித வளத்தை வலுப்படுத்துதல் மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சி
  7. நடத்தை மாற்றம் தொடர்பு - சமூக அணிதிரட்டல் மற்றும் IEC
  8. துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு - பல்வேறு துறைகளின் ஈடுபாடு
  9. கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை - அறிக்கைகளின் பகுப்பாய்வு, மதிப்பாய்வு, கள வருகை மற்றும் கருத்து

பூச்சியியல் கூறு - மண்டல பூச்சியியல் அலகுகள் (ஒருங்கிணைந்த VBD):

  1. பூச்சியியல் ஆய்வக வலுவூட்டலுக்கான தளவாடங்கள்
  2. கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு
  3. கள நடவடிக்கைகளுக்கான இயக்கம் ஆதரவு
  4. பூச்சியியல் நிபுணர் மற்றும் பூச்சி சேகரிப்பாளர்களை பணியமர்த்துதல், ஆகிய திட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் பாராட்டினார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget