மேலும் அறிய

Bipin Rawat Helicopter crash: பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் இதுதான்! வெளியானது முப்பைடைகளின் விசாரணை முடிவு

சரியாக இயங்கும் தன்மை கொண்ட விமானம், தரையிறங்கும் நேரத்தில் சில பல துல்லியமற்ற அணுகுமுறைகளால் நிலபரப்பில் மோதி விபத்துக்குள்ளாகும் வகையாகும்.

தமிழகத்தின் குன்னூர் அருகே ஜெனரல் பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் தவறுதலாக நிலப்பரப்பில் மோதி (controlled flight into terrain (CFIT) விபத்துக்குள்ளானதாக முப்படைகள் நடத்திய விசாரணைக் குழுவில் தெரிய வந்துள்ளது. 

கடந்த டிசம்பர் 8ம் தேதி, இந்திய விமானப்படையின் எம்.ஐ-17 வி-5 ஹெலிகாப்டரில், வெலிங்டன் பாதுகாப்பு சேவை பயிற்சி கல்லூரியில் உரையாற்ற சென்ற, இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் குன்னூர் அருகே ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தார். இதில், ஜெனரல் பிபின் ராவத்தின் துணைவியார் மதுலிகா ராவத், படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த குரூப் கேப்டன் வருண்சிங் என மொத்தம் 14 படை வீரர்கள் உயிரிழந்தனர்.   

இந்த விபத்து ஒட்டமொத்த தேசத்தையும் நிலைகுழைய செய்தது. ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.    

விபத்துக்கான காரணம்:  

விமானியின் தவறுதலால், நிலப்பரப்பில் மோதி (controlled flight into terrain (CFIT) ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று விசாரனையில் கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூடிய விரைவில், விசாரணைக் குழு தனது அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க இருப்பதாக தி இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.  

Controlled flight into terrain என்றால், சரியாக இயங்கும் தன்மை கொண்ட விமானம், தரையிறங்கும் நேரத்தில் சில பல துல்லியமற்ற அணுகுமுறைகளால் நிலபரப்பில் மோதி விபத்துக்குள்ளாகும் வகையாகும்.  இத்தகையை விமான விபத்துக்கள் பெரும்பாலும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாகும் கூறப்படுகிறது.      

வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருத்தல், சூழ்நிலை விழிப்புணர்வை உணராது இருத்தல், நிலபரப்பு பற்றிய புரிதல் இல்லாமை, மோசமான வானிலை சமயத்தில் (instrument meteorological conditions) மாற்று விதிமுறைகளை கடைபிடித்தல், மோசமான தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிஎப்ஐடி (CFIT) வகையிலான விமான விபத்து ஏற்படலாம் என்று பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் (International Air Transport Association, IATA) தெரிவிக்கிறது. 

இந்தியாவின் முதலாவது முப்படைகளி்ன் தலைமைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத், பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்கள் உட்பட நமது ராணுவம் தொடர்பான பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்கான அவரது முயற்சிகள் தேசத்தின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் என இந்திய ராணுவம் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget