மேலும் அறிய

CBSE 10th Result 2022: சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு: 94.40% பேர் தேர்ச்சி; சென்னையில் எவ்வளவு?

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 94.40 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 94.40% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

கரோனா பெருந்தொற்றுச் சூழல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 2020ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டன. அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ கடந்த ஆண்டு அறிவித்தது.

2 பருவத் தேர்வுகள்

புதிய நடைமுறையின்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெறுகிறது.

ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒரு தேர்வை நடத்த முடியாத சூழலில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், மாதிரி கேள்வித் தாள்களும், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஏற்கெனவே திட்டமிட்டவாறு 2021-22 கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ முதல் பருவப் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றது. 

ஏப்ரல் - மே மாதத்தில் பொதுத் தேர்வுகள்

அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி, மே 17ஆம் தேதி வரை நடைபெற்றது. 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி, மே 18ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கிடையே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, உயர் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்தது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

இச்சூழலில், நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று (ஜூலை 22) வெளியிட்டது. இதில் ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி பெற்றனர். சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில்  94.40% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 98.97 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளைப் பார்ப்பது எப்படி?

இதை மாணவர்கள் தங்களின் பதிவெண், பள்ளி எண், பிறந்த தேதி, நுழைவுச் சீட்டு எண் ஆகியவற்றைப் பதிவிட்டு https://cbseresults.nic.in/class-tenth/class10th22.htm என்ற இணைய முகவரியில் தேர்வு முடிவுகளைக் காணலாம். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள்..!
LPG பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்.. ஸ்மார்ட் சிலிண்டரை அறிமுகம் செய்யும் HP! விபரம் இதோ..
LPG பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்.. ஸ்மார்ட் சிலிண்டரை அறிமுகம் செய்யும் HP! விபரம் இதோ..
EPS-95 ஓய்வூதிய உயர்வு: 7500 ரூபாய் கோரிக்கை - அரசின் முடிவு என்ன?
EPS-95 ஓய்வூதிய உயர்வு: 7500 ரூபாய் கோரிக்கை - அரசின் முடிவு என்ன?
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு! அடுத்த திறப்பு எப்போது? முழு விவரம்!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு! அடுத்த திறப்பு எப்போது? முழு விவரம்!

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள்..!
ராகுல் காந்தி நேற்று கைது... இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
ராகுல் காந்தி நேற்று கைது.. இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Cockroach Party : 'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ தமிழ்நாட்டில் பெருகும் இளைஞர்கள் ஆதரவு..!
'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ பின்னணியும் நோக்கமும்..!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
Shopping cash vs card : ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?
ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
Embed widget