மேலும் அறிய

LPG பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்.. ஸ்மார்ட் சிலிண்டரை அறிமுகம் செய்யும் HP! விபரம் இதோ..

கேஸ் கசிவை உடனுக்குடன் கண்டறிந்து, பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்பும் வசதியுடன் கூடிய 'ஸ்மார்ட் சிலிண்டர்களை' அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்கள் விறகு அடுப்புகளில் இருந்து மாறி கேஸ் அடுப்புகளை பயன்படுத்துகின்றன. உஜ்வாலா போன்ற திட்டங்களும் கேஸ் சிலிண்டர் விநியோக வளர்ச்சியும் இதற்கு ஒரு முக்கிய காரணம். வீடு, கடை, உணவகங்கள் என அனைத்து இடங்களிலும் கேஸ் சிலிண்டர்கள் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் கேஸ் சிலிண்டர்களை மிக பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. லேசாக கேஸ் கசிந்தாலும் பல பேரின் உயிரையே பறித்து கொள்ளும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஸ்மார்ட் சிலிண்டர்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

LPG பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்.. ஸ்மார்ட் சிலிண்டரை அறிமுகம் செய்யும் HP! விபரம் இதோ..

குறிப்பாக நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில், பொதுத்துறை நிறுவனமான ஹெச்பி ஒரு முயற்சியை எடுத்துள்ளது. கேஸ் கசிவை உடனுக்குடன் கண்டறிந்து, பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்பும் வசதியுடன் கூடிய 'ஸ்மார்ட் சிலிண்டர்களை' அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நவீன சிலிண்டர்கள் சாதாரண சிலிண்டர்களை விட அதிக பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சிலிண்டரில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால், அதை உடனடியாக கண்டறிந்து அந்த சாதனமே ஒலியின் மூலம் எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் விபத்துகளை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட் சிலிண்டர்கள் இன்டர்நெட் அல்லது செயலி வசதியுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம், பயனர் வீட்டில் இல்லாத நேரத்திலும் கேஸ் கசிவு ஏற்பட்டால், அவரது மொபைலுக்கு உடனடி எச்சரிக்கை அனுப்பப்படும். அதே போல கேஸ் தீர்ந்து போவதற்கு முன்பே, சிலிண்டரின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை கண்காணித்து, சிலிண்டரை மாற்ற வேண்டிய நேரத்தை பயனர்களுக்கு முன்கூட்டியே நினைவுபடுத்தும் தொழில்நுட்பமும் இதில் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்படும் தீ விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகவும் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் ஏற்படும் கசிவுகளை கவனிக்க முடியாத சூழலில், இந்த தொழில்நுட்பம் ஒரு சிறந்த பாதுகாப்பு அரணாக செயல்படும் என கூறப்படுகிறது.

LPG பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்.. ஸ்மார்ட் சிலிண்டரை அறிமுகம் செய்யும் HP! விபரம் இதோ..

எனவே ஹெச்பி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரும் போது, வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும் கேஸ் சிலிண்டர் குறித்த பயம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக செல்லலாம். முதலில் ஹெச்பி நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை சோதனை அடிப்படையில் விரைவில் குறிப்பிட்ட சில நகரங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.பொதுமக்களிடையே இந்தத் தொழில்நுட்பத்தின் வரவேற்பை பொறுத்து, நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஹெச்பி நிறுவனத்தின் இந்தத் திட்டம் வெற்றிபெற்றால், இது மற்ற எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget