மேலும் அறிய

Shopping cash vs card : ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?

Shopping cash vs card : ஷாப்பிங் செல்லும் போது குறிப்பிட்ட பொருட்களை வாங்க திட்டமிட்டு சென்ற பிறகு பை நிறைய துணிகள் மளிகை பொருட்கள் என பலவற்றையும் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஷாப்பிங் செய்ய பணம்- கார்டு எது பெஸ்ட்.?

நவீன காலத்தில் உள்ளங்கைக்குள் உலகமே வந்து விட்டது. இதனால் வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டு உலகத்தில் எந்த ஒரு இடத்தில் இருக்கும் எந்த ஒரு பொருளை கூட ஆர்டர் செய்யலாம். அப்படி இருக்கையில் சிலர் தினந்தோறும் ஷாப்பிங் செல்வார்கள், ஒரு சிலர் வாரம் ஒருமுறை செல்வார்கள். அதிலும் பலர் மாதம் ஒரு முறை குடும்பத்தோடு ஷாப்பிங் செல்வார்கள். தங்களது வருமானத்திற்கு ஏற்றார் போல ஷாப்பிங் செய்வார்கள்.

இன்றைய காலத்தில் ஷாப்பிங் செய்யும்போது பணத்தைப் பயன்படுத்துவதா அல்லது கார்டு ஸ்வைப் செய்வதா என்பது பலரிடையே குழப்பமாகவும் விவாதமாக உள்ளது. இது தொடர்பாக நிதி நிபுணர்களின் கூறுகையில், காசை மிச்சப்படுத்துவது பயன்படுத்தும் முறையை விட, செலவைக் கட்டுப்படுத்தும் பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது என தெரிவிக்கின்றனர். 

கார்டில் எவ்வளவு செலவு செய்கிறோம்.?

குறிப்பாக பணம் கொடுத்து பொருட்களை வாங்கும்போது, கையில் இருக்கும் பணம் எவ்வளவு என்பதை தெரிவதால் பொருட்களை வாங்குபவர்கள் தேவையற்ற செலவுகளை குறைக்க முடிகிறது. இதனால் மாதாந்திர பட்ஜெட்டைப் பின்பற்றவும், சேமிப்பை அதிகரிக்கவும் எளிதாக்குகிறது. அதே நேரம் கிரெடிட் கார் மூலம் ஸ்வைப் செய்வது எளிதாக இருப்பதால், எவ்வளவு செலவாகிறது என்ற உணர்வு உடனடியாக இருக்காது. மேலும் கிரெடிட் கார்டில் முழு பில்லை சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால் வட்டி மற்றும் கட்டணங்கள் சேர்ந்து செலவு அதிகரிக்கும். இதனால் திட்டமிட்டதை விட அதிகமாக செலவழிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

பணம் மூலம் ஷாப்பில் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

  • பணம் கையில் இருந்தால் செலவைக் கண்கூடாக உணரலாம்.
  • கையில் உள்ள அளவிற்கே செலவு செய்வீர்கள்.
  • பட்ஜெட்டை எளிதாகப் பின்பற்ற முடியும்.
  • வட்டி கட்ட வேண்டிய நிலை வராது.
  • பணம் முடிந்தால் ஷாப்பிங் நிற்கும்.
  • தேவையில்லாத பொருட்களை வாங்கும் வாய்ப்பு குறையும்.
  • அதிக செலவு செய்வது குறையும்.
  • குழந்தைகளுக்கும் பணத்தின் மதிப்பை கற்றுக்கொடுக்கலாம்.
  • கடன் சுமை ஏற்படாது.

கார்டின் மூலம் ஷாப்பிங் செய்வதால் ஏற்படும் குறைகள்:

  • செலவாகும் பணம் உடனடியாக தெரியாது.
  • Credit Card-ல் அதிகம் செலவு செய்ய வாய்ப்பு உண்டு.
  • தேவையற்ற பொருட்களையும் வாங்கத் தூண்டும்.
  • அதிக செலவு ஒரு பழக்கமாக மாறலாம்.
  • பில் முழுவதும் கட்டவில்லை என்றால் வட்டி அதிகம்.
  • தாமதக் கட்டணம் விதிக்கப்படும்.
  • கடன் சுமை உருவாகலாம்.
  • Offers கவர்ச்சியால் தேவையற்ற வாங்குதல் நடக்கலாம்.

காசை மிச்சப்படுத்த சில வழிகள்:

  • ஷாப்பிங் பட்டியல் என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்ற லிஸ்டை தயாரிக்கவும்.
  • அந்த பட்டியலில் உள்ள பொருட்களை மட்டும் வாங்கவும்.
  • Offer பார்த்து தேவையில்லாத பொருள் வாங்க வேண்டாம்.
  • மாதம் மாதம் தங்களுரிய ஷாப்பிங்  பட்ஜெட்டை உருவாக்க வேண்டும்.
  • அவசரமில்லாமல் வாங்கும் பொருட்களை வாங்குவதை ஒரு நாள் தள்ளிப் போடவும்.
  • தேவையானபொருட்களுக்கும், ஆசையாக வாங்கும் பொருட்களுக்கும் வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும்.
  • சேமிப்பை முதலில் ஒதுக்கவும்.
  • பிறகு செலவு செய்யவும்.

திட்டமிட்ட சேமிப்பு

காசை மிச்சப்படுத்துவதில் பணம்  பெரும்பாலானவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும், ஏனெனில் அது செலவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. Credit Card-மூலம் ஷாப்பில் செய்வதால் பல குறைகள் இருந்தாலும்,  முழு பில்லையும் சரியான நேரத்தில் செலுத்தும் போது  Cashback, Reward Points போன்ற நன்மைகளால் கூடுதல் சேமிப்பும் கிடைக்க வாய்ப்பு உண்டு. எனவே, காசை மிச்சப்படுத்தும் உண்மையான வழி பணமா அல்லது கார்டா என்பதில் இல்லை. திட்டமிட்ட செலவு, தேவையான பொருட்களை மட்டுமே வாங்கும் பழக்கம் மற்றும் நிதி ஒழுக்கமே முக்கிய காரணங்கள் என பொருளாதார ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget