Watch Video | நச்சுனு ஒரு சல்யூட்.! அதே கெத்து.! வீர் சக்ரா விருதை பெற்றுக்கொண்ட அபி நந்தன்!
Abhinandan Awarded Vir Chakra: குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர்
வீர தீர செயல்களுக்கு வழங்கப்படும் வீர் சக்ரா விருது கேப்டன் அபிநந்தனுக்கு இன்று வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இந்த விருதை வழங்கினார். டெல்லியில் எளிமையான முறையில் இன்று நடைபெறவுள்ள விழாவில் இந்த விருதை வழங்கப்பட்டது. கெத்தாக ராணுவ நடை நடந்து ஜனாதிபதிக்கு சல்யூட் அடித்த அபி நந்தன் வீர் சக்ரா விருதை பெருமையாக பெற்றுக்கொண்டார். விருது வென்ற கேப்டனுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
காலிஸ்தான் தீவிரவாதிகளை கொசுக்களைப்போல அடக்கியவர் இந்திராகாந்தி : சர்ச்சையை தொடரும் கங்கனா
Delhi: Wing Commander (now Group Captain) Abhinandan Varthaman being accorded the Vir Chakra by President Ram Nath Kovind, for shooting down a Pakistani F-16 fighter aircraft during aerial combat on February 27, 2019. pic.twitter.com/vvbpAYuaJX
— ANI (@ANI) November 22, 2021
புல்வாமாவில் தாக்கப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் F16 ரக விமானத்தை அவர்களின் எல்லைக்குள் சென்று தாக்கினார் அபிநந்தன். இதில் கேப்டன் அபிநந்தன் சென்ற மிக் 21 ரக போர் விமானம் தாக்குதலுக்கு உள்ளானது. பாராசூட் மூலம் உயிர் தப்பிய அபிநந்தனர் பாக் எல்லையில் விழுந்தார். பாக் பிடியில் சிக்கிய அபிநந்தனை பின்னர் இந்தியாவின் பேச்சுவார்த்தை மூலம் பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இந்த சம்பவம் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் அபி நந்தன். அபிநந்தனின் மீசை இந்தியா முழுவதும் வைரலானது. இளைஞர்கள் பலரும் அபிநந்தன் மீசை ஸ்டைலை ஆர்வமாக வைத்துக்கொண்டனர். பின்னர் பாகிஸ்தான் சம்பவத்துக்கு பிறகு ஓய்வில் இருந்த அபிநந்தனுக்கு குரூப் கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்