School Teachers dismiss: 36 ஆயிரம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் டிஸ்மிஸ்...கொல்கத்தா உயர் நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை...காரணம் என்ன?
ஆரம்ப பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
36 ஆயிரம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டதாக கூறி, கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனைவரையும் பணி நீக்கம் செய்துள்ளது.
மேற்குவங்கத்தில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த ஆட்சிக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு, ஊழல் விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன.
ஆரம்ப பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட விவகாரம்:
இந்நிலையில், ஆரம்ப பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. போதுமான அனுபவம் இல்லாதவர்களை, ஆசிரியர்களாக நியமித்துள்ளனர் எனக் கூறி, 36 ஆயிரம் பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது கொல்கத்தா உயர் நீதிமன்றம்.
அடுத்த நான்கு மாதங்களுக்கு பள்ளிகளில் உதவி ஆசிரியர்களாக பணிபுரியும்படியும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் புதிய நியமனம் செய்து இந்தப் பணியிடங்களை மாநில அரசு நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி:
சமீபத்தில், உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஆரம்ப பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணபித்தவர்களின் எண்ணிக்கையை விட ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது பின்னர் கண்டறியப்பட்டது.
பல பயிற்சி பெறாத ஆசிரியர்கள் பரிந்துரைகளின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர் எனக் கூறிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்குலி, அனைவரையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதேபோன்று, கடந்த 2016ஆம் ஆண்டு, லஞ்சம் பெற்று கொண்டு, ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை நியமிக்கப்பட்டனர்.
லஞ்சம் பெற்று கொண்டு நியமித்த குழுவை கலைத்து உயர் நீதிமன்றம், ஆசிரியர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்தது என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். இச்சூழலில், இதேபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், தமிழ்நாட்டில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் அடிப்படையில், ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெறாமல், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 1,747 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்த ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதற்கு தகுதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், அடுத்த கட்டமாக இவர்களை பணி நீக்கம் செய்வதற்கான ஆலோசனையில் கல்வித்துறை ஈடுபட்டது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பாடங்களை நடத்தக்கூடிய இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.