ABP - C Voters Survey: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி யாருக்கு சாதகம்? - கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்
எதிர்கட்சிகளின் ”இந்தியா” என்ற கூட்டணி தொடர்பாக ஏபிபி நிறுவனத்திற்காக, சி-வோட்டர்ஸ் நடத்திய பிரத்யேக கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
எதிர்கட்சிகளின் ”இந்தியா” என்ற கூட்டணி தொடர்பாக ஏபிபி நிறுவனத்திற்காக, சி-வோட்டர்ஸ் நடத்திய பிரத்யேக கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில், ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பெயர் இந்தியா எனப் பெயரிடப்பட்டுள்ள சூழலில், abp செய்திகளுக்காக சி வோட்டர்ஸ் அமைப்பு அகில இந்திய அளவில் பிரத்யேக கருத்துகணிப்பு ஒன்றை நடத்தியது. கடந்த வாரம் நடைபெற்ற இந்த கள ஆய்வில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு, 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களது பதில்களை தெரிவித்துள்ளனர். எதிர்கட்சிகளின் கூட்டணி தொடர்பான அந்த கருத்துகணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
- பாஜகவை வீழ்த்தும் நோக்கில் ஒருங்கிணைந்துள்ள எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு “இந்தியா” என பெயர் சூட்டப்பட்டது சரியா? தவறா? என கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பெரும்பாலோனோர் சரியே என பதிலளித்துள்ளனர். கருத்து கணிப்புகளின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சரி - 49%
தவறு - 39%
பதில் சொல்ல விரும்பவில்லை - 12%
- எதிர்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள ”இந்தியா” எனும் கூட்டணியால் பாஜகவை வீழ்த்த முடியுமா? என்ற கேள்விக்கு, முடியும் என பெரும்பாலானோர் பதிலளித்துள்ளனர். கருத்து கணிப்புகளின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முடியும் - 48%
முடியாது - 34%
பதில் சொல்ல விரும்பவில்லை - 18%
- எதிர்கட்சிகளின் கூட்டணியை காங்கிரஸ் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்கிறதா? என்ற கேள்விக்கு, ஆம் என பெரும்பாலானோர் பதிலளித்துள்ளனர். கருத்து கணிப்புகளின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆம் - 37%
இல்லை - 35%
பதில் சொல்ல விரும்பவில்லை - 28%
- எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்த பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா என்ற கேள்விக்கு, பெரும்பாலானோர் இல்லை என பதிலளித்துள்ளனர். கருத்து கணிப்புகளின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆம் - 35%
இல்லை - 36%
பதில் சொல்ல விரும்பவில்லை - 29%