![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
G20 Summit 2023: மனைவியின் கைகோர்த்து டெல்லியில் சாலையில் நடைபோட்ட பிரிட்டன் பிரதமர்..
தனது மனைவியின் கைகோர்த்து பாதுகாப்பு படை வீரர்களுடன் டெல்லி சாலையில் நடந்து சென்ற பிரிட்டன் பிரதமர்
![G20 Summit 2023: மனைவியின் கைகோர்த்து டெல்லியில் சாலையில் நடைபோட்ட பிரிட்டன் பிரதமர்.. British PM Rishi Sunak Takes A Stroll On Delhi Streets With Wife pictures goes on viral G20 Summit 2023: மனைவியின் கைகோர்த்து டெல்லியில் சாலையில் நடைபோட்ட பிரிட்டன் பிரதமர்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/09/95badee438715597c931fba3806b4ce71694259316285102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்கக டெல்லியில் இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷிசுனக் தனது மனைவியுடன் டெல்லி சாலையில் கைகோர்த்து நடந்து சென்ற புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளுடன் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 அழைப்பு நாடுகள் என மொத்தம் 40 முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், தென்கொரிய அதிபர் யூன் சுக்யோல், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், தென்னாப்பிரிக்கா, துருக்கி, அர்ஜென்டினா, பிரான்ஸ், நைஜீரியா வக்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக் தனது மனைவி அக்ஷதா மூத்தியுடன் இணைந்து இந்தியாக்கு வருகை தந்தார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய இருவரையும் மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே வரவேற்றார்.
I’ve landed in Delhi ahead of the #G20 summit.
— Rishi Sunak (@RishiSunak) September 8, 2023
I am meeting world leaders to address some of the challenges that impact every one of us.
Only together can we get the job done. pic.twitter.com/72vE60c7Fg
இந்த நிலையில் நேற்றிரவு ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி மத்திய டெல்லியில் சாலையில் கைக்கோர்த்து கொண்டு நடந்து சென்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரிட்டன் பிரதமரும், அவரது மனைவியுன் பாதுகாப்பு படை வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் வீடு இருக்கும் சாலையில் நடந்து சென்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: G20 Summit 2023: தொடங்கிய ஜி20 மாநாடு...ஒன்றுகூடிய உலக தலைவர்கள்...பரபர மீட்டிங்..!
G20 Summit 2023 LIVE: ஜி20 நாடுகளின் அமைப்பில் 21வது நாடாக இணைந்தது ஆப்பிரிக்க யூனியன்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)