Breaking LIVE : தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE
Background
சென்னையில் 108வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 5ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது.அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
Breaking LIVE : ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
Breaking LIVE : நீதிமன்ற வளாகத்தில் ரவுடியை சொல்ல முயற்சி
சென்னை - சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் கூலிப்படையைச் சேர்ந்த மதுரை பாலாவை கொலை செய்ய முயற்சி.
நீதிமன்ற வளாகத்தில் 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய வந்த நிலையில் 2 பேர் தப்பியோட்டம் - 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
Breaking LIVE : தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்
Breaking LIVE : நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜாக்கண்ட் அரசு வெற்றி
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி
Breaking LIVE : 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரி பள்ளிகள் திட்டம் தொடக்கம்
26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரி பள்ளிகள் திட்டம் தொடக்கம். அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தகைசால் பள்ளிகள் டெல்லி பள்ளிகளை போல் மாதிரி பள்ளிகளை உருவாக்கும் திட்டம்