Breaking LIVE: டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பலி
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE
Background
சென்னையில் 107வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 4ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது.அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
தமிழ்நாட்டில் இன்று 470 பேருக்கு கொரோனா உறுதி...!
தமிழ்நாட்டில் இன்று 470 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பலி
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் பலி
பூந்தமல்லியில் 6 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்!
சென்னை அருகே பூந்தமல்லியில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணியால் இன்று முதல் 6 மாதங்கள் போக்குவரத்தில் மாற்றம்
ஆம்புலன்ஸ், இலகு ரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் நுழையத் தடை - காவல்துறை
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனுதாக்கல்
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் எடப்படி பழனிசாமி தரப்பில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லாது என இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு விவகாரம்; ஈபிஎஸ் தரப்பில் கேவியட் மனு
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல்