Breaking LIVEமத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கடரமணி நியமனம்
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவாக காணலாம்.
LIVE
Background
சென்னையில் 130ஆவது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 130ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர்.28) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கடரமணி நியமனம்
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.எஸ்.வெங்கடரமணியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கூடுதல் பொறுப்பு
தி.மு.க.வின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Breaking LIVE: காஞ்சிபுரம்: சிலிண்டர் குடோனில் தீ விபத்து- 20 பேர் படுகாயம்.
காஞ்சிபுரம் மாவட்டம் தேவ்ரியம்பாக்கம் பகுதியில் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். குடோனில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். இதில் சிறுவர் உட்பட 4 பேருக்கு கடும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர்கள் தீயணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து வெடித்ததால் மீட்பு பணிகள் சவாலானதாக உள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Breaking LIVE : ரேசன் கடைகளில் 4000 பணியிடங்களை நிரப்ப உத்தரவு
ரேசன் கடைகளில் 4000 பணியிடங்களை ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு
Breaking LIVE : சென்னையில் பரவலாக மழை
காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், சென்னை நகரத்தில் கனமழை பொழிந்து வருகிறது