Breaking LIVE: அ.தி.மு.க.வில் இருந்து மைத்ரேயனை நீக்கம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
Breaking LIVE : தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை செய்திகளாக உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ஏபிபி நாடு பக்கத்தில் இணைந்திடுங்கள்
LIVE
Background
சென்னையில் 141வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.
இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 141வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர்.09) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
Breaking LIVE: ஐ.ஐ.டி. உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இந்தி கட்டாயம் - உள்துறை அமைச்சகம் பரிந்துரை!
மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு கல்வி நிறுவனங்களில் இந்தி மொழி கட்டாயம் என்று அமித் ஷா தலைமையிலான அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Breaking LIVE: தேய்ந்த தெற்கை, தலை நிமிர்த்துயது திராவிட கழகம் - மு.க.ஸ்டாலின் உரை!
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் தி.மு.க. வின் பங்கு அளப்பரியது; தேய்ந்த தெற்கை, தலைநிமிர வைத்த பெருமை திராவிட முன்னேற்ற கழகத்திற்கு உண்டு என்று மு.க.ஸ்டாலின் உரையில் குறிப்பிட்டு உள்ளார்.
Breaking LIVE: கழகமும் தமிழ்நாடும் நம் கண்கள்! - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தி.மு.க.வினர் கழகத்தையும் தமிழகத்தையும் இரு கண்களாக கருத வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Breaking LIVE: கீழ் தரமான அரசியல் செய்ய துணியாதவர்கள் பா.ஜ.க. கட்சி! மு.க.ஸ்டாலின் சாடல்!
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி கீழ்தரமான அரசியல் செய்கிறார்கள்; மதம் மற்றும் ஆன்மீக உணர்வை தூண்டி அதில் அரசியல் செய்கிரார்கள் பா.ஜ.கவினர். அவர்களுக்கு சொல்லிக்கொள்ள சாதனைகள் இல்லை என்பதால், தி.மு.க. பற்றி அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். கவனமாக இருக்கவும்.
Breaking LIVE: கொள்கையை என்றும் நினைவில் நிறுத்த வேண்டும்!- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டிய காலம் இது. கொள்கையை என்றும் மறந்துவிடக் கூடாது; கொள்கைக்காக சேரும் கூட்டமாக இருக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பேச்சு!