Breaking LIVE : மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்; முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
LIVE
Background
வடகிழக்கு பருவமழை முன்னேற்ற காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.
அடுத்து வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை..?
01.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
02.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
04.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஆங்கிலம் என்பது அறிவல்ல-சீமான்
"ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அறிவல்ல. பல மொழி என்றால் இந்த நிலப்பரப்பு ஒன்றாக இருக்கும்; ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும்" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
பாஜகவை விமர்சித்த திருமாவளவன்
"இந்திய ரூபாய் சரிவுக்கு மோடி அரசின் தவறான அரசியல் பொருளாதார கொள்கை தான் காரணம்; கார்ப்பரேட் மற்றும் சனாதனம் ஆகிய இரண்டும் தான் மோடி அரசின் கொள்கை" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்; முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் மழைநீர் தேங்காமல், ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
டிஜிட்டல் கரன்சி-ரூ.275 கோடிக்கு வர்த்தகம்
டிஜிட்டல் கரன்சியைப் பயன்படுத்தி 9 வங்கிகள் 48 பரிவர்த்தனைகளை மேற்கொண்டன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் சோதனை முயற்சியாக நடைபெற்ற டிஜிட்டல் கரன்சி ரூ.275 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். பாஜகவில் உள்ள பெண் நிர்வாகிகளை கண்ணியக் குறைவாக திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் பேசியதை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.