Breaking News Tamil LIVE: தமிழக அரசின் திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் - முதல்வர் உத்தரவு
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு, இந்தியா,உலகம்,விளையாட்டு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் உடனுக்குடன் தகவல்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
சென்னையில் நேற்று இந்த வருடத்தின் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில், “ சென்னை நுங்கம்பாகத்தில் 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கான வெப்பநிலையும், மீனம்பாக்கத்தில் 40.1 டிகிரி செல்சியஸ் அளவிற்கான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெப்ப நிலையானது வரும் காலத்தில் தொடரலாம் அல்லது அதிகரிக்கலாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் இன்று வேறு எந்த பகுதியிலும் பதிவாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலையானது இந்த வருடத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்பது குறிப்பிடத்தக்கது.
Hottest day of the year in Chennai again with first 40 C of the year for city. The trend of hot days will continue in Chennai & might even go higher.
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) June 1, 2022
Nunga (Chennai City) - 40 C (Hottest day of year)
Meena (Chennai AP) - 40.1 C
Once again Chennai remains hottest place in state
கடந்த மே மாதத்தில் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்தது. இதனையடுத்து ஆந்திர பிரதேசத்தில் அசானி புயல் தாக்கியதால் தமிழ்நாட்டிலும் மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டிலும் மழை நீடித்தது. சென்னையிலும் சில இடங்களில் மழை பெய்தது.
ஆனால் கடந்த 3 நாட்களாக சென்னையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த 3 நாட்களில் சென்னையில் பல்வேறு இடங்களில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சில பகுதிகளில் 37 -38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று இந்த ஆண்டிலேயே இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக சென்னையில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி..!
நீட் விலக்கு கோரும் சட்டமுன்முடிவை ஜனாதிபதிக்கு அனுப்பியதற்கு ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். 21 சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.ரன். ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
- கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி உடனான சந்திப்பில் முதல்வர் வலியுறுத்தல்
இளையாஜாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து..!
பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இளையராஜா தனது 80 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் - முதல்வர் உத்தரவு
தமிழக அரசின் அறிவிப்புகளை குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட நிதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குடிநீர் வசதி, ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநர் ஆர்.என் ரவியை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..
ஆளுநர் ஆர்.என் ரவியை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று..
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று..