Breaking LIVE: கனமழை எதிரொலி: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
LIVE
Background
ஒவ்வொரு மாதமும் இருமுறை சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அந்தவகையில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டரின் விலை 36 ரூபாய் 50 காசுகள் வரை குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜூலை 6ஆம் தேதி 19 கிலோ எடை சிலிண்டரின் விலை 2177 ரூபாயாக இருந்தது. இந்த விலை தற்போது 2141 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 14.2 கிலோ எடைக் கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை பொதுவாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், ஜூலை 6ஆம் தேதிவீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது 1068.50 ரூபாயாக சிலிண்டர் விலை உயர்ந்திருந்தது. தற்போது அந்த விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.
முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. அதேபோல் கொரோனா ஊரடங்கில் இருந்தே பலருக்கும் மத்திய அரசின் சிலிண்டர் மானியம் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனால் சிலிண்டருக்கு முழு விலையையும் சாமானிய மக்கள் கொடுக்க வேண்டியிருந்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
இதற்கிடையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் 9 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூபாய் 200 மானியமாக வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்பது சமூக உள்ளடக்கத்திற்கான பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் பிரபலமான முயற்சியாகும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச எல்பிஜி இணைப்பு வழங்கப்படுகிறது.
கனமழை எதிரொலி: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
இத்தாலி வீரருடன் மோதிய பிரக்ஞானந்தா டிரா..!
இத்தாலி வீரர் லாரன்சோவுடன் இந்திய வீரர் பிரக்ஞானந்தா ஆடிய ஆட்டம் சமனில் முடிந்தது.
என்.டி.ராமாராவின் மகள் தற்கொலை
ஹைதராபாத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் மகள் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மீட்பு. ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்ட நிலையிலிருந்த உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை.
ம.பி மருத்துவமணை தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் தனியார் மருத்துவமணையில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு.
தொடரும் அமளியால் மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார் சபா நாயகர்.