Breaking LIVE: காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா தொடக்கம்
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Background
இன்றைய நாளில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. புயல் கரையை கடந்தும் கடந்த பின்பும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதனிடையே சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை டிசம்பர் 15 முதல் 19 ஆம் தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டிசம்பர் 16 ஆம் தேதியான இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளது. அதேசமயம் சென்னையில் இருந்து தென்கிழக்கு அந்தமான் பகுதியில் இருதினங்களுக்கு முன்பு உருவான வளிமண்டல சுழற்சியானது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடலோர பகுதிகளை நெருங்கும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் (16.12.2022) : சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். காற்றின் வேகம் இன்று மாலை படிப்படியாக குறையக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Breaking LIVE : ரஷ்ய அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி போனில் உரையாடினார்!
பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட பிற முக்கிய விஷயங்களை பற்றி கலந்துரையாடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Breaking LIVE : ரஷ்ய அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி ஃபோனில் உரையாடினார்!
பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட பிற முக்கிய விஷயங்களை பற்றி கலந்துரையாடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















