மேலும் அறிய

Breaking News LIVE: திருப்பூரில் அரசுப்பேருந்து கார் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பரிதாப பலி..!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE:  திருப்பூரில் அரசுப்பேருந்து  கார் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பரிதாப பலி..!

Background

தமிழ்நாட்டில் தொடர்ந்து 260வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. 

கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ஆம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.

இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. 

இன்றைய விலை

இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 260வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி இன்று (பிப்ரவரி.05) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூற்று ஐம்பது நாள்களை கடந்துள்ளது.  

எத்தனால் கலந்த பெட்ரோல்

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

19:29 PM (IST)  •  05 Feb 2023

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குக - விஜயகாந்த்

பருவம் தவறி பெய்த மழையால் பாதித்த விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிவராணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

16:10 PM (IST)  •  05 Feb 2023

கார் அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பலி..!

திருப்பூர் ஓலப்பாளையம் அருகே அரசுப்பேருந்தும் காரும் மோதிக்கொண்டதில் காரில் பயணித்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

13:52 PM (IST)  •  05 Feb 2023

குமரி தோவாளை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை குறைவு

குமரி தோவாளை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை குறைவு 

13:51 PM (IST)  •  05 Feb 2023

Petrol : சென்னையில் 260 நாளாக பெட்ரோல் விலை மாற்றமில்லாமல், ரூ.102.60 ரூபாய்க்கு விற்பனை

Petrol : சென்னையில் 260 நாளாக பெட்ரோல் விலை மாற்றமில்லாமல், ரூ.102.60 ரூபாய்க்கு விற்பனை 

12:49 PM (IST)  •  05 Feb 2023

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்..!

நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
IND vs AUS:
IND vs AUS: "கண்டா வரச் சொல்லுங்க" சிட்னியில் சிங்க முகம் காட்டுவார்களா ரோகித் - விராட்? ஏங்கும் ரசிகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
IND vs AUS:
IND vs AUS: "கண்டா வரச் சொல்லுங்க" சிட்னியில் சிங்க முகம் காட்டுவார்களா ரோகித் - விராட்? ஏங்கும் ரசிகர்கள்!
Happy New Year 2025:
Happy New Year 2025: "இனி உச்சம்தான்" பிறந்தது புத்தாண்டு! ஆடிப்பாடி ஆனந்தமாய் வரவேற்ற மக்கள்!
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
small savings: 2025ம் ஆண்டின் முதல் நாளே ஏமாற்றம்..! சிறுசேமிப்பு திட்டங்கள், எந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி? - மத்திய அரசு
small savings: 2025ம் ஆண்டின் முதல் நாளே ஏமாற்றம்..! சிறுசேமிப்பு திட்டங்கள், எந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி? - மத்திய அரசு
Embed widget