மேலும் அறிய

Breaking News LIVE: ஆந்திராவில் சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு - திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE: ஆந்திராவில் சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு - திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்

Background

சென்னையில் தொடர்ந்து 9வது மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

9 மாதங்களை கடந்தும் மாறாத விலை 

கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.

அதன்பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.  இந்தசூழலில் பெட்ரோல், டீசல் விலை 277வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 

அதன்படி இன்று (பிப்ரவரி 22) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எத்தனால் கலந்த பெட்ரோல்

கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என பெட்ரோலியம் மற்றும்  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

18:57 PM (IST)  •  22 Feb 2023

Breaking News LIVE: மாநில மகளிர் கொள்கை- மார்ச்-8 ஆம் தேதி வெளியிடப்படும்!

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை மார்ச்-8 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. பெண்களுக்கான சம உரிமை, பொருளாதார மேம்பாடு உள்ளிடற்றவற்றை ஊக்கப்படுத்த இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18:54 PM (IST)  •  22 Feb 2023

Breaking News LIVE: சீமானை விரைவில் நேரில் சந்திக்கும் காயத்ரி ரகுராம்..!

18:50 PM (IST)  •  22 Feb 2023

Breaking News LIVE : ஆளுநர் தன் வேலையை எப்போது செய்யப்போகிறார்? பொன்முடி கேள்வி!

ஆளுநர் தன் வேலையை எப்போது செய்யப்போகிறார்?

ஆளுநர் மாளிகையை காபி ஷாப் போல மாற்றுவது ஆளுநரின் செயல்பாடாக இருக்க முடியாது’ இருக்க கூடாது என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஆளுநர் அக்கப்போர் செய்வதை விடுத்து, எப்போது தன் வேலையை செய்யப் போகிறார்? என்று பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். 

18:15 PM (IST)  •  22 Feb 2023

ஆந்திராவில் சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு - திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்

ஆந்திராவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியபோது சாலை விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

18:05 PM (IST)  •  22 Feb 2023

Breaking News LIVE: ஈரோடு கிழக்குதொதி இடைத்தேர்தல் - தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம் நிறைவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் ஆகியோருடன் நடைபெற்ற  ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
IND vs AUS:
IND vs AUS: "கண்டா வரச் சொல்லுங்க" சிட்னியில் சிங்க முகம் காட்டுவார்களா ரோகித் - விராட்? ஏங்கும் ரசிகர்கள்!
Breaking News LIVE: புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை உயர்வு
Breaking News LIVE: புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை உயர்வு
Happy New Year 2025:
Happy New Year 2025: "இனி உச்சம்தான்" பிறந்தது புத்தாண்டு! ஆடிப்பாடி ஆனந்தமாய் வரவேற்ற மக்கள்!
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
Embed widget