Breaking News LIVE: ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர்கள்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
அந்திரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, எஸ்.எஸ்.எல்.வி - டி2 ராக்கெட் இன்று காலை 09.18 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 3 செயற்கைகோள்களை சுமந்து செல்ல உள்ளது. அந்த ராக்கெட் 15 நிமிடங்கள் பயணம் செய்து, பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கி.மீ. வட்ட சுற்றுப்பாதையில் 3 செயற்கைகோள்களையும் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
3 செயற்கைக்கோள்கள்:
எஸ்.எஸ்.எல்.வி - டி2 ராக்கெட்டில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இ.ஓ.எஸ்-07', சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் நிறுவனத்தின் 'ஆஸாதிசாட்-2' மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த அண்டாரிஸ் நிறுவனத்தின் 'ஜேனஸ்-1', ஆகிய 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள் இந்த ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதில் 'ஆஸாதிசாட்-2' எனும் 8.7 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை, 75 பள்ளிகளை சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 750 மாணவிகள் இணைந்து உருவாக்கி உள்ளனர்.
SSLV-D2/EOS-07 Mission: launch is scheduled for Feb 10, 2023, at 09:18 hrs IST from Sriharikota
— ISRO (@isro) February 8, 2023
Intended to inject EOS-07, Janus-1 & AzaadiSAT-2 satellites into a 450 km circular orbit
Vehicle ready at the launch pad undergoing final phase checks https://t.co/D8lncJqZjc
எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்:
இஸ்ரோ சார்பாக இதுவரை அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை சுமந்து செல்லும் வகையில் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்கள் வடிவமைக்கப்பட்டு வந்தன. தற்போது, வளரும் நாடுகள், பல்கலைக்கழகங்கள் மூலம் தயாரிக்கப்படும் சிறிய செயற்கைக்கோள்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்கை கோள்களை பூமியின் குறைந்த சுற்று வட்டப்பாதையில் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்களை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. 500 கிலோவிற்கு குறைவான செயற்கை கோள்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் முயற்சி தோல்வி:
எஸ்எஸ்எல்வி டி1 ரக ராக்கெட்டை வடிவமைத்தை இஸ்ரோ கடந்த ஆண்டு ஆகஸ்ட் அதனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஆனால் புவியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும் போது சென்சார் செயலிழப்பின் காரணமாக செயற்கைக்கோள்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதைதொடர்ந்து, தற்போது மேம்படுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி டி2 ரக ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தப்படுகிறது.
5 வாக்குப்பதிவு இயந்திரங்கள்..!
ஈரோடு கிழக்கில் 77 வேட்பாளர்கள் களமிறங்குவதால் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
Breaking News LIVE: காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ரஜினி பாட்டில் பணி இடைநீக்கம்!
காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ரஜினி பாட்டில் அவை விதிமுறைகளை மீறியதற்காக கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் ஜெஜதீப் தங்கர் அறிவித்துள்ளார்.
Breaking News LIVE: விசைத்தறி தொழிலாளர் கூலி உயர்வு - ஒப்பந்தம் கையெழுத்து!
விசைத்தறி தொழிலாளர்களை 12 வாரங்களில் மனுதாரர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணை
கூடுதல் ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்ய தடை..!
அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் ஆணைக்கு உயர்நீதிம்னறம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.