மேலும் அறிய

Breaking News LIVE: "இந்தியாவே எனது வீடுதான்" - எம்.பி. ராகுல் காந்தி நெகிழ்ச்சி!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE:

Background

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 8) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 444வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

15:51 PM (IST)  •  08 Aug 2023

Breaking News LIVE: "இந்தியாவே எனது வீடுதான்" - ராகுல் காந்தி

இந்தியா முழுவதுமே என் வீடுதான் என்று டெல்லியில் மீண்டும் அரசு இல்லம் தரப்பட்டது பற்றி ராகுல்காந்தி பேட்டி அளித்துள்ளார். 

15:49 PM (IST)  •  08 Aug 2023

Breaking News LIVE: நளினியின் வழக்கில் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை

கணவன் முருகன் இலங்கை துணை தூதரகத்திற்கு செல்ல அனுமதி கோரிய வழக்கில் நளினியின் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

15:47 PM (IST)  •  08 Aug 2023

Breaking News LIVE: ஆடி கிருத்திகை - ராணிப்பேட்டையில் நாளை விடுமுறை

ஆடி கிருத்திகையையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

14:41 PM (IST)  •  08 Aug 2023

Breaking News LIVE: மாநிலங்களவில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

14:28 PM (IST)  •  08 Aug 2023

Breaking News LIVE: ஆகஸ்ட் 12,13ல் வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி

 மீண்டும் எம்.பி. பதவி கிடைத்த நிலையில், தனது தொகுதியான வயநாட்டிற்கு வரும் 12,13ஆம் தேதி ராகுல் காந்தி செல்கிறார்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத முதல்வர் ஸ்டாலின்.. தாங்கி பிடித்த துணை முதல்வர் உதயநிதி!
முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத ஸ்டாலின்.. தாங்கி பிடித்த உதயநிதி!
அரசு மரியாதையுடன் நடந்த ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு.. கண்ணீர் கடலில் தேசம்!
அரசு மரியாதையுடன் நடந்த ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு.. கண்ணீர் கடலில் தேசம்!
Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!
Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!
Vettaiyan Review: சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Noel Tata : TATA-ன் கிரீடம் யாருக்கு? ரத்தன் டாடாவின் மனசாட்சி! யார் இந்த நோயல் டாடா?Ratan Tata Untold love story  | ரத்தன் டாட்டா BREAK UP 💔 கடைசி வரை BACHELOR!Ratan Tata Passed away | RIP ரத்தன் டாடாஉடலுக்கு இறுதி அஞ்சலி! கண்ணீர் மழையில் மக்கள்History of Ratan Rata |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத முதல்வர் ஸ்டாலின்.. தாங்கி பிடித்த துணை முதல்வர் உதயநிதி!
முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத ஸ்டாலின்.. தாங்கி பிடித்த உதயநிதி!
அரசு மரியாதையுடன் நடந்த ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு.. கண்ணீர் கடலில் தேசம்!
அரசு மரியாதையுடன் நடந்த ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு.. கண்ணீர் கடலில் தேசம்!
Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!
Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!
Vettaiyan Review: சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
Rafael Nadal: ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் : இதுதான் இவரது கடைசி போட்டி.!
Rafael Nadal: ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் : இதுதான் இவரது கடைசி போட்டி.!
H Raja speech:  கொலைகாரங்க சார் இந்த சர்க்கார்... கொந்தளித்த ஹெச்.ராஜா
கொலைகாரங்க சார் இந்த சர்க்கார்... கொந்தளித்த ஹெச்.ராஜா
தமிழகத்திற்கு ரூ 7,268 கோடி.. உபிக்கு எப்போவும் போல் ஜாக்பாட்தான்.. வரி பகிர்வை விடுவித்த மத்திய அரசு!
தமிழகத்திற்கு ரூ 7,268 கோடி.. உபிக்கு எப்போவும் போல் ஜாக்பாட்தான்.. வரி பகிர்வை விடுவித்த மத்திய அரசு!
அயன் பட பாணியில் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?
அயன் பட பாணியில் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Embed widget