Breaking News LIVE, July 31: கேரளம்: வயநாடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
Abpnadu Breaking LIVE July 31 : வயநாடு நிலச்சரிவு செய்திகள், தமிழ்நாடு செய்திகள் உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE
Background
- வயநாடு நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தீவிரம் – இரவு நேரத்திலும் தீவிரமாக நடந்த மீட்பு பணி
- வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை ராணுவம், விமானப்படை இணைந்து தீவிரமாக மீட்டு வருகின்றனர்.
- வயநாடு நிலச்சரிவில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே உடல்கள் சிதறி கிடக்கும் கோரம் – நாடே வேதனை
- கேரளாவில் தொடர்ந்து கனமழை; 11 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை
- வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு – தமிழர்கள் 2 பேர் உயிரிழப்பு
- வயநாடு நிலச்சரிவு; உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூபாய் 2 லட்சம் நிதி – பிரதமர் மோடி
- நிலச்சரிவால் சோகத்தில் மூழ்கிய கேரளம்; தமிழ்நாடு அரசு ரூபாய் 5 கோடி நிவாரண நிதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- வயநாட்டில் மோசமான வானிலை; பயணத்தை ஒத்தி வைத்த ராகுல்காந்தி, பிரியங்கா
- தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணை 43வது முறையாக நிரம்பியது
- தமிழ்நாட்டில் 331 பேருக்கு சிக்கன்குனியா பாதிப்பு – சுகாதாரத்துறை
- தமிழ்நாட்டிற்கு ஆகஸ்ட் மாதத்திற்கான காவிரி நீரை வழங்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை
- நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜாமின்
- பட்ஜெட்டில் மாநிலத்தின் பெயர் இல்லை என்றால் புறக்கணிப்பு என்று அர்த்தம் இல்லை – நிர்மலா சீதாராமன்
- புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்
- ஒலிம்பிக்கில் மனுபாக்கர் – சரப்ஜோத் சிங் இணைக்கு வெண்கலம்
- இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 – சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி
Breaking News LIVE, July 31: கேரளம்: வயநாடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
Breaking News LIVE, July 31: கேரளம்: வயநாடு, காசர்கோடு, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE, July 31: கேரளம் வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 270 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE, July 31: கேரளம் வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 270 ஆக அதிகரித்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Breaking News LIVE, July 31: வயநாடு நிலச்சரிவு: அதிமுக ரூ. 1கோடி நிதி
Breaking News LIVE, July 31: கேரளம்: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240ஆக உயர்வு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகின்றன.
Breaking News LIVE: மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீராக ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், மாலை 7 மணிக்கு நீர் திறப்பு மேலும் அதிகரித்து 1.70 லட்சம் கண்ணாடியாக உயர்த்தப்பட உள்ளது.
அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 21,500 கன அடியும், 16 கண் மதக்கல் வழியாக 1,48,500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. காவிரி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.