Breaking News LIVE, AUG 6:வங்கதேச ஓட்டலுக்கு தீ வைப்பு; 24 பேர் உடல் கருகி உயிரிழப்பு
Breaking News LIVE, AUG 6: உள்ளூர் தொடங்கி உலக நாடுகள் வரையிலான முக்கிய நிகழ்வுகளை பற்றி, உடனடியாக அறிய ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
LIVE
Background
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேர் கைது - இன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தமிழக அமைச்சர் ராதாகிருஷ்ணன் சந்திக்கிறார்
- நெல்லை மாநகராட்சி மேயராக ராதாகிருஷ்ணன் தேர்வு - கோவை மேயர் வேட்பாளராக திமுகவின் ரங்கநாயகி அறிவிப்பு
- யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த கோரிய மனு - மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பணி நியமன ஆணைகளை வழங்கிட வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
- இணையதள வாயிலாக கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் உயர்வு - டிடிவி தினகரன் கண்டனம்
- சேலம், நாமக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை - காட்பாடி, சித்தூர், பேருந்து நிலையங்களில் தேங்கிய மழைநீர்
- இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான மாட்டிறைச்சி ஏற்றுமதி - மாடுகளை பாதுகாப்போம் என கூறிவிட்டு ஏற்றுமதி செய்வதா என திமுக எம்.பி., தங்கத் தமிழ்ச்செல்வன் கேள்வி
- வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது - அடையாளம் காணப்படாத 29 சடலங்கள் ஒரே இடத்தில் அடக்கம்
- வங்கதேச சூழல் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை - இந்தியா வந்தடைந்த ஷேக் ஹசினா உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு
- வங்கதேசத்தில் இருந்து ஒரு கோடி பேர் அகதிகளாக மேற்குவங்கத்தில் நுழையலாம் - பாஜக தலைவர் எச்சரிக்கை
- பீகார் முதல் அமைச்சர் அலுவலகத்தை தகர்க்கப் போவதாக மின்னஞ்சல் அனுப்பிய நபர் கைது
- வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா - லண்டன் அல்லது பெலாரஸ் நாட்டிற்கு செல்லலாம் என தகவல்
- வங்கதேசத்தில் நாடாளுமன்றத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள் - முன்னாள் பிரதமரின் சிலை தகர்ப்பு
- ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல் - பலர் காயம்
- பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் இன்று ஜெர்மனியை எதிர்கொள்கிறது இந்திய அணி
- பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இன்று களம் காண்கிறார்
தெலங்கானா மாநிலம் ஸ்ரீரங்கப்பூர் மண்டலம் ஜானம்பேட் கிராமத்தில் உள்ள வீட்டிற்குள் முதலை நுழைந்ததால் அதிர்ச்சி
தெலங்கானா மாநிலம் ஸ்ரீரங்கப்பூர் மண்டலம் ஜானம்பேட் கிராமத்தில் உள்ள வீட்டிற்குள் முதலை நுழைந்ததால் அதிர்ச்சி. உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் முதலையை பத்திரமாக மீட்டு கிருஷ்ணா நதியில் விட்டனர்.
Zepto To Bengaluru : அலுவலக வாடகையை சேமிக்க மும்பையில் இருந்து பெங்களூருக்கு மாறும் Zepto நிறுவனம்
Bengaluru : அலுவலக வாடகையை சேமிக்க மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு மாறும் Zepto நிறுவனம். மாதம் 50 லட்சம் வரை வாடகை தர வேண்டியதாக இருப்பதால் விற்பனையகத்தை பெங்களூருவுக்கு மாற்றலாகிறது
Tamilnadu Weatherman Update : தென் சென்னை, தாம்பரம், புறநகர் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்
Tamilnadu Weatherman Update : தென் சென்னை, தாம்பரம், புறநகர் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்
South Chennai, Tambaram and southern suburbs are seeing intense rains from Red
— Tamil Nadu Weatherman (@praddy06) August 6, 2024
🍅 enjoy. pic.twitter.com/lJLzn8ZeZY
Breaking News LIVE, AUG 6:வங்கதேச ஓட்டலுக்கு தீ வைப்பு; 24 பேர் உடல் கருகி உயிரிழப்பு
Breaking News LIVE, AUG 6:வங்கதேச நட்சத்திர ஓட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால், தீயில் சிக்கி 24 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
9ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
வரும் 9ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது