மேலும் அறிய

Breaking News LIVE: வயநாட்டில் நிலச்சரிவு: மீட்புக் குழுவினருடன் உரையாடிய ராகுல்காந்தி

Breaking News LIVE, Aug 2: கேரளா நிலச்சரிவு தொடங்கி பாரிஸ் ஒலிம்பிக் வரையிலான, உலகின் முக்கிய செய்திகளின் அப்டேட்களை, உடனடியாக அறிய ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.

LIVE

Key Events
Breaking News LIVE: வயநாட்டில் நிலச்சரிவு: மீட்புக் குழுவினருடன் உரையாடிய ராகுல்காந்தி

Background

  • பட்டியலினத்தவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு - திராவிட மாடலுக்கு மற்றுமோர் ஒரு அங்கீகாரம் என முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு
  • ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயிலை கடந்த மாதம் பெறாதவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெறலாம் - தமிழ்நாடு அரசு
  • ஆடிப் பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிப்பு
  • திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் இருந்த 2 உயரழுத்த மின் கோபுரங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு
  • பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு; தமிழகம் முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை: பென்டிரைவ், செல்போன்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்
  • போலி பேராசிரியர்கள் விவகாரம்; நிரந்தர தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி
  • வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 298 ஆக அதிகரிப்பு - 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைப்பு
  • முண்டக்கை, வெள்ளிமலயைச் சேர்ந்த 27 மாணவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழப்பு - 23 மாணவர்களை காணவில்லை என தகவல்
  • நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மேப்பாடியில் தமிழ்நாடு அரசின் உதவி மையம் திறப்பு - உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை ஏற்பாடு
  • வயநாட்டை தொடர்ந்து அடுத்த மேகவெடிப்பு; இமாச்சலும் உருக்குலைந்தது: 5 பேர் பலி:50 பேர் மாயம்
  • நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - 13 பேருக்கு எதிராக சிபிஐயின் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
  • இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதல் நடத்திய ஹிஜிபுல்லா அமைப்பு
  • காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் 15 பேர் பலி
  • பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் பேட்மிண்டன் காலிறுதியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் இன்று களமிறங்குகிறார்
  • பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் போட்டியில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வி
21:51 PM (IST)  •  02 Aug 2024

வயநாடு நிலச்சரிவு : IAS அதிகாரிகளுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட தமிழ்நாட்டில் இருந்து கேரளா சென்றுள்ள IAS அதிகாரிகளுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .

கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கூறும்படி முதலமைச்சர் அறிவுறுத்தல்

21:27 PM (IST)  •  02 Aug 2024

வயநாடு நிலச்சரிவு எதிரொலி; சபரிமலை நிர்வாகத்திற்கு பறந்த நீதிமன்ற உத்தரவு

வயநாடு நிலச்சரிவு எதிரொலி; சபரிமலை நிர்வாகத்திற்கு பறந்த நீதிமன்ற உத்தரவு

கேரளாவில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது வரை மீட்புப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை அரசு உறுதி வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளது.தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வானது கேரளாவில் சில நாட்களில் நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் நதிக்கரை ஓரங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய இருக்கிறார்கள். அதேபோல அந்த நேரங்களில் முக்கிய கோவில்களுக்கும் பக்தர்கள் படை எடுப்பர். இந்த சூழலில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு முக்கியமான வழக்கு ஒன்று தாக்கல். செய்யப்பட்டிருந்தது. வரும் ஆகஸ்ட் நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் அதிகமாக வர இருப்பதால் அங்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சபரிமலை வரும் பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை கேரளா அரசு மட்டுமல்லாது மாவட்ட நிர்வாகம், உள்ளூர் நிர்வாகம் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரக்கூடிய பக்தர்களுக்கு பாதுகாப்பான முறையில் வழிபாடுகளில் நடத்துவதற்கும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நிகழ்ச்சிகளை செய்து தர வேண்டும் என கேரள காவல்துறைக்கும் தேவசம்போர்டு அதிகாரிகளுக்கும் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை மட்டுமல்லாது வயநாடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள நதிக்கரைகளிலும் தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.

21:02 PM (IST)  •  02 Aug 2024

‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தில் தனக்கு தெரியாமல் 1 நிமிட காட்சி சேர்க்கப்பட்டதாக இயக்குநர் விஜய் மில்டன் குற்றச்சாட்டு

விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியான ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தில் தனக்கு தெரியாமல் 1 நிமிட காட்சி சேர்க்கப்பட்டதாக இயக்குநர் விஜய் மில்டன் வீடியோ வெளியிட்டு குற்றச்சாட்டு

20:58 PM (IST)  •  02 Aug 2024

Aadi Velli Kuthuvilakku Poojai : 1008 பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

ஆடி வெள்ளியை ஒட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. 1008 பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

20:18 PM (IST)  •  02 Aug 2024

சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர ஷாக்.. 1556 கிலோ கெட்டுப்போன இறைச்சி! சென்னை செண்ட்ரல் ஸ்டேஷனில் வந்திறங்கிய ஆபத்து..
பயங்கர ஷாக்.. 1556 கிலோ கெட்டுப்போன இறைச்சி! சென்னை செண்ட்ரல் ஸ்டேஷனில் வந்திறங்கிய ஆபத்து..
Rahul Gandhi: தமிழ்நாடு செய்ததை இந்தியா செய்யவில்லை - வேலைவாய்ப்பின்மைக்கு காரணம்? ராகுல் காந்தி பேச்சு
Rahul Gandhi: தமிழ்நாடு செய்ததை இந்தியா செய்யவில்லை - வேலைவாய்ப்பின்மைக்கு காரணம்? ராகுல் காந்தி பேச்சு
”பங்களாமேடு அருகே பரபரப்பு” பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியத்தால் தப்பிய 40 பயணிகள்..!
”பங்களாமேடு அருகே பரபரப்பு” பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியத்தால் தப்பிய 40 பயணிகள்..!
”வெளிநாட்டில் இருந்து  திரும்பியதும் கட்சியிலும் ஆட்சியிலும் அதிரடி” முதல்வர் ஸ்டாலினின் சரவெடி திட்டம்..!
”வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் கட்சியிலும் ஆட்சியிலும் அதிரடி” முதல்வர் ஸ்டாலினின் சரவெடி திட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Cabinet Shuffle| விரைவில் அமைச்சரவை மாற்றம்?அச்சத்தில் சீனியர்கள்..ஸ்டாலினின் சரவெடி திட்டம்!Siddaramaiah  issue | கர்நாடக அரசியலில் ட்விஸ்ட் CM பதவிக்கு போட்டா போட்டி காங்கிரஸ் மேலிட திட்டம்?TVK Cadres vs Police | ”Permission இருக்கா?”ரவுண்டு கட்டிய போலீஸ் தவெகவினர் வாக்குவாதம்Mahavishnu | ”சித்தர்கள் தான் சொன்னாங்க” மகாவிஷ்ணு பகீர் வாக்குமூலம்Shock ஆன போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர ஷாக்.. 1556 கிலோ கெட்டுப்போன இறைச்சி! சென்னை செண்ட்ரல் ஸ்டேஷனில் வந்திறங்கிய ஆபத்து..
பயங்கர ஷாக்.. 1556 கிலோ கெட்டுப்போன இறைச்சி! சென்னை செண்ட்ரல் ஸ்டேஷனில் வந்திறங்கிய ஆபத்து..
Rahul Gandhi: தமிழ்நாடு செய்ததை இந்தியா செய்யவில்லை - வேலைவாய்ப்பின்மைக்கு காரணம்? ராகுல் காந்தி பேச்சு
Rahul Gandhi: தமிழ்நாடு செய்ததை இந்தியா செய்யவில்லை - வேலைவாய்ப்பின்மைக்கு காரணம்? ராகுல் காந்தி பேச்சு
”பங்களாமேடு அருகே பரபரப்பு” பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியத்தால் தப்பிய 40 பயணிகள்..!
”பங்களாமேடு அருகே பரபரப்பு” பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியத்தால் தப்பிய 40 பயணிகள்..!
”வெளிநாட்டில் இருந்து  திரும்பியதும் கட்சியிலும் ஆட்சியிலும் அதிரடி” முதல்வர் ஸ்டாலினின் சரவெடி திட்டம்..!
”வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் கட்சியிலும் ஆட்சியிலும் அதிரடி” முதல்வர் ஸ்டாலினின் சரவெடி திட்டம்..!
"தடை விதிங்க! கல்வி நிறுவனங்களில் இதையெல்லாம் நடத்தக்கூடாது" இயக்குநர் அமீர் ஆவேசம்
Breaking News LIVE: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்
Breaking News LIVE: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்
Fuel Tanker Collision: கோர விபத்து..! வெடித்து சிதறிய எரிபொருள் டேங்கர் - 48 பேர் உயிரிழப்பு, 50 மாடுகள் கருகின
Fuel Tanker Collision: கோர விபத்து..! வெடித்து சிதறிய எரிபொருள் டேங்கர் - 48 பேர் உயிரிழப்பு, 50 மாடுகள் கருகின
Producer Dilli Babu: ராட்சசன், பேச்சுலர் பட தயாரிப்பாளர் டில்லி பாபு திடீர் மரணம் - காரணம் என்ன?
Producer Dilli Babu: ராட்சசன், பேச்சுலர் பட தயாரிப்பாளர் டில்லி பாபு திடீர் மரணம் - காரணம் என்ன?
Embed widget