Breaking News LIVE: இரவு 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலில், ஏற்கனவே 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், 90 சதவிகித தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு வரும் ஜுன் 1ம் தேதி ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அது நிறைவடைந்ததும், 7 கட்டங்களாக பதிவான வாக்குகளும், மொத்தமாக ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. இந்த கட்டத்தில் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், கடைசி கட்ட தேர்தல் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச், சேர்ந்த 57 தொகுதிகளில் கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் பீகாரைச் சேர்ந்த 8 தொகுதிகள், சண்டிகரைச் சேர்ந்த ஒரு தொகுதி, இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 4 தொகுதிகள், ஜார்கண்டைச் சேர்ந்த 3 தொகுதிகள், ஒடிஷாவைச் சேர்ந்த 6 தொகுதிகள், மேற்குவங்கத்தைச் சேர்ந்த 9 தொகுதிகள், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலா 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இது போன்ற சூழலில், இன்று மாலை பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தர உள்ளார். முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் கோட்டையிலும், 2019-ம் ஆண்டு இமயமலையில் உள்ள கேதார்நாத் குகையிலும் தியானம் மேற்கொண்டார். அவ்வகையில் நடப்பாண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடையும் நிலையில், இந்த முறையும் தியானம் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை, மோடி தேர்வு செய்துள்ளார்.
Breaking News LIVE: இரவு 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 30, 2024
Breaking News LIVE: கடும் வெப்பம் - புதுச்சேரியில் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
கடும் வெப்பம் நிலவுவதால் புதுச்சேரியில் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடும் வெப்பம் நிலவுவதால் ஜூன் 10ஆம் தேதிக்கு பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா எப்போதோ அங்கீகரித்துவிட்டது - வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்
பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா எப்போது அங்கீகரித்து விட்டது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் முடிவில் இந்தியாவுக்கு எந்த மாற்றமும் இல்லை. 1980 களிலேயே பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்து விட்டது. நார்வே, அயர்லாந்து, ஸ்பெயின் நாடுகள் தற்போது தான் பாலசீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. - வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்
Breaking News LIVE: ராஜேஸ்தாஸ் மனுவை தள்ளுபடி செய்க - பீலா வெங்கடேஷ்
மின் இணைப்பு துண்டிப்புக்கு எதிராக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என முன்னாள் மனைவி பீலா வெங்கடேஷ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.
சேலம் குருவம்பட்டி வன உயிரிகள் பூங்காவில் மான் முட்டியதில் ஊழியர் தமிழ்ச்செல்வன் உயிரிழப்பு
மான் முட்டியதில் வனத்துறை ஊழியர் உயிரிழப்பு
சேலம் குருவம்பட்டி வன உயிரிகள் பூங்காவில் மான் முட்டியதில் ஊழியர் தமிழ்ச்செல்வன் உயிரிழப்பு
காயமடைந்த முருகேசன் என்பவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி