Breaking News LIVE: சென்னையில் இன்று 105 டிகிரி வெப்பம் பதிவு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
- திருப்பதி அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். நெல்லூர் இந்துகூர்பேட்டையை சேர்ந்தவர்கள் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு காணிப்பாக்கம் சென்றபோது விபத்துக்குள்ளானது.
-
தீவிர புயலாக வலுவடைந்த ‘ரெமால் புயல்’ வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் அருகே கரையை கடந்தது.
கடந்த 6 மணிநேரத்தில் 13 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து மோங்லா என்னும் பகுதியில் ‘ரெமால்’ புயல் கரையை கடந்தது. வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, புயல் கரையை கடந்தபோது, காற்றானது மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் காற்று. வீசியது. இந்த புயலானது மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கும் வங்கதேசத்தின் கெயுபாடாவுக்கும் இடையே உள்ள கடற்கரையில் கடந்தது. தற்போது ரெமால் புயலானது வலுவிழந்துள்ளது. புயல் பாதிப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன என தெரிவித்துள்ளனர்
- 17வது சீசன் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது மூன்றாவது கோப்பையை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதையடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணி விளையாடிய இரண்டு இறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது.
- ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 டிக்கெட்டுகளை ரூ. 1.42 லட்சத்துக்கு கள்ளச்சந்தையில் விற்றவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
சென்னையில் இன்று 105 டிகிரி வெப்பம் பதிவு
கோடை காலம் முடிவடையும் தருவாயிலும் சென்னையில் இன்று 105 டிகிரி வெப்பம் பதிவாகியது.
400 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. வெற்றி பெறும் - அண்ணாமலை
தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
வாகன தணிக்கை! ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 1.10 கோடி ரூபாய் அபராதம் வசூல்
தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் ஒரே நாளில் ரூபாய் 1.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்
நெல்லை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல்மணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் கடிதம் எழுதியுள்ளார்.
Flamingos Pondicherry : புதுச்சேரி, ஊசுட்டேரியில் குவிந்த ஆஸ்திரேலிய ப்ளெமிங்கோ பறவைகள்..
புதுச்சேரி அடுத்த ஊசுட்டேரியில் இனப்பெருக்கத்திற்காக ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய பிளமிங்கோ பறவைகள் குவித்துள்ளன