Breaking News LIVE: முல்லைபெரியாறு விவகாரம்! கேரளாவை எதிர்த்து மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
தென் மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து , புயலாக வலுப்பெற்று, 25.05.2024 காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது, வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்று, வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இந்த புயலுக்கு ரெமல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழை பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வரும் 31 ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, கேரளாவில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியில் கேரள அரசு ஈடுபட்டு வருவதால், அதனை உடனே கைவிடவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காவிரிப் படுகையில் அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும். இதனால் இப்பணியினை நிறுத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
Breaking News LIVE: காவல்துறை - போக்குவரத்து தொழிலாளர்கள் மோதல் நல்லதல்ல - AITUC
காவல்துறை - போக்குவரத்து தொழிலாளர்கள் மோதல் நல்லதல்ல. தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் ( AITUC ) தெரிவித்துள்ளது.
Breaking News LIVE: முல்லைபெரியாறு விவகாரம்! கேரளாவை எதிர்த்து மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரள அரசின் முன்மொழிவை மத்திய அரசு பரிசீலிக்கக் கூடாது எனவும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய வனத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது இந்திய அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜாமினில் விடுவிக்கப்பட்டார் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ்
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Breaking News LIVE: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம்- மூன்றாவது நீதிபதி விசாரணை செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: நீதிபதி சுவாமிநாதன்
குண்டர் சட்டம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு: நீதிபதி பாலாஜி
நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு. மூன்றாவது நீதிபதி விசாரணை செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
நதிநீர் பங்கீடு பிரச்னை: தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை
நதிநீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.