Breaking LIVE : நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. இன்னும் 2 கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகளானது வரும் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் பேட்டியளித்த டெல்லி முதலமைச்சர் ஜெஜ்ரிவால், எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை என தெரிவித்தார். இந்திய அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில், சமூக வலைத்தள பிரபலமான இர்ஃபான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவ இயக்குநரை நேரில் சந்தித்து இர்ஃபான் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை டி.எம்.எஸ் வளாகத்திற்கு நேரடியாக சென்று மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி இயக்குநரை சந்தித்து மன்னிப்பு கடிதம் கொடுத்து மன்னிப்பு கோரியதாக கூறப்படுகிறது. அவரின் மன்னிப்பு கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இர்ஃபானுக்கு நிபந்தனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதாவது கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இர்ஃபான் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 பேருக்கு மட்டுமே வேலை செய்பவரையா கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார்? ராகுல் காந்தி பேச்சு
"God, what kind of person you have sent... works for 22 people": Rahul Gandhi takes jibe at PM Modi
— ANI Digital (@ani_digital) May 23, 2024
Read @ANI Story | https://t.co/0HyS1h4A58#RahulGandhi #PMModi #LokSabhaElection #Congress pic.twitter.com/tNLyNeTFiW
கேரள மழை : எர்ணாகுளம், திரிச்சூருக்கு ரெட் அலர்ட் அறிவித்தது இந்திய வானிலை மையம்
Kerala rains: IMD issues red alert for Ernakulam, Thrissur
— ANI Digital (@ani_digital) May 23, 2024
Read @ANI Story | https://t.co/fa7xAyefDN#Kerala #Ernakulam #Thrissur #IMD #RedAlert pic.twitter.com/EpuHdzI9xV
நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்
நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்https://t.co/wupaoCzH82 | #Rajinikanth #UAE #goldenvisa #TamilNews @rajinikanth pic.twitter.com/IFHZSXNnZT
— ABP Nadu (@abpnadu) May 23, 2024
6-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நிறைவு
6-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நிறைவு
6-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவுபெறுகிறது.
Brittania Nutri Choice: பிரிட்டானியா நிறுவனத்திற்கு ₹60,000 அபராதம் விதிப்பு!
52 கிராம் குறைந்ததற்கு ரூ.60,000 அபராதம். கேரளா திருச்சூரில், பிரிட்டானியா நியூட்ரி சாய்ஸ் பாக்கெட்டில் 300 கிராம் என அச்சிடப்பட்டு, 52 கிராம் குறைவாக இருந்ததால் நீதிமன்றத்தை நாடினார் ஜார்ஜ் என்பவர். இப்போது அந்நிறுவனத்துக்கு ரூ.60000 நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது