Breaking News LIVE: ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (22-ஆம் தேதி வாக்கில்) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24- ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னிப்புக் கோரிய இர்ஃபான்!
யூட்டூபர் இர்ஃபான் தனது மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தினை வெளிநாடு சென்று அறிந்து கொண்டது மட்டும் இல்லாமல், அதனை பொதுவெளியில் தெரிவித்தார். இந்நிலையில் இது பெரும் பிரச்னையாகவே, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் யூட்டூபர் இர்ஃபான் நேரில் சென்று மன்னிப்புக் கோரியுள்ளார்.
ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம்
இரு சக்கர வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Breaking News LIVE: கோயில் திருவிழாவில் ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு
கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள செட்டியாம்பாளையத்தில் கோயில் திருவிழாவில் நடந்த பரண் கிடாய் பூஜையில், ஆட்டை வெட்டி அதன் ரத்தம் குடித்த பூசாரி பழனிசாமி (45) மயங்கி விழுந்து உயிரிழந்தார். சிறுவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Breaking News LIVE: 1997ல் வாங்கிய அம்பாசிடர் காரை பயன்படுத்தப்போகும் புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 1997 ஆண்டு முதன் முதலில் வாங்கிய அம்பாசிடர் கார் பழுதடைந்து இருந்த நிலையில் தற்போது அதனை சரி செய்து மீண்டும் அதனை உள்ளூரில் மட்டும் பயன்படுத்த உள்ளார்.
Breaking News LIVE: மக்களவை தேர்தல் பரப்புரை தொடர்பாக பாஜக , காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
மக்களவை தேர்தல் பரப்புரை தொடர்பாக பாஜக , காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாஜக தலைவர்கள் மதம், சாதி ரீதியிலான பேச்சுக்கள் கூடாது என்றும், காங்கிரஸ் தலைவர்கள் அரசியலமைப்பு ஒழிக்கப்படும் என்ற வகையிலும் பேசக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.