Breaking News LIVE: ராமோஜி ராவ் இறுதி ஊர்வலத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
-
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணிகளுக்கான 6,244 காலி இடங்களுக்கு நடத்தப்படும் தேர்வு இன்று(09.06.2024) நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது.இந்த முறை பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் தொடர்ச்சியாக 3வது முறையாக மோடி பிரதமராக இன்று பதவியேற்கிறார். தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பாஜக, கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைக்கிறது. இதனால் மத்திய அமைச்சரவையில் பல முக்கிய துறைகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- டி20 உலகக்கோப்பையில் நேற்று 4 போட்டிகள் நடந்தது. இதனிடையே இன்று 3 போட்டிகள் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு வெஸ்ட் இண்டீஸ் - உகாண்டா அணிகளும், இரவு 8 மணிக்கு இந்தியா - பாகிஸ்தான் அணிகளும், இரவு 11 மணிக்கு ஓமன் -ஸ்காட்லாந்து அணிகளும் மோதுகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை காண மிகப்பெரிய அளவில் ஆவல் ரசிகர்களிடத்தில் காணப்படுகிறது.
NEET CM Stalin : நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு! நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்று கூறிய நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை 7 மொழிகளில் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஹைதராபாத் ஃபிலிம் சிட்டி நிறுவனர் ராமோஜி ராவ் இறுதி ஊர்வலத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பு
ஹைதராபாத் ஃபிலிம் சிட்டி நிறுவனர் ராமோஜி ராவ் இறுதி ஊர்வலத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பு
ஹைதராபாத் ஃபிலிம் சிட்டி நிறுவனர் ராமோஜி ராவ் இறுதி ஊர்வலத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்புhttps://t.co/wupaoCzH82 | #RamojiRao #NaraChandrababuNaidu #TDP #viral pic.twitter.com/icArScJGZI
— ABP Nadu (@abpnadu) June 9, 2024
விமான நிலைய ஊழியரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ₹8.5 கோடி மதிப்பிலான 13.5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் கடத்தி வந்த இலங்கை பயணி மற்றும் விமான நிலைய ஊழியரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
குட்டி யானையை தாயுடன் இணைக்கும் முயற்சி தோல்வி
தாயை பிரிந்து தவித்த குட்டி யானையை முதுமலை காப்பகத்திற்கு பராமரிப்பிற்காக கொண்டு வந்த வனத்துறை அதிகாரிகள் குட்டி யானையை தாயுடன் இணைக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
PM Modi Swearing In ceremony : பிரதமர் மோடி பதவியேற்பு : காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அழைப்பு
Congress President and LoP in Rajya Sabha, Mallikarjun Kharge was called by BJP leader Pralhad Joshi late last night to invite him to the swearing-in ceremony of PM-designate Narendra Modi. At present, no decision has been taken on Kharge's participation in the swearing-in…
— ANI (@ANI) June 9, 2024