Breaking News LIVE: திமுக எம்.பி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்; நீட் தேர்வு, கலைஞர் 100 ஆண்டு விழா
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
- யூடியூபர் சவுக்கு சங்கர், சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களுக்கு கொக்கைன் சப்ளை செய்ததாக பரணி மற்றும் சையத் நிவாஸ் ஆகியோரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில்லில் இருந்து நைஜீரிய நாட்டைச் சேர்ந்த லியோனார்டு என்பவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 30 கிராம் கொக்கைன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனர் ராமோஜி ராவ் தனது 87வது வயதில் இன்று காலை ஹைதராபாத்தில் காலமானார். இன்று அதிகாலை 3.45 மணியளவில் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. ராமோஜி ராவின் உடல் இறுதி தரிசனத்திற்காக ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படும். அங்கு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மறைந்த ராமோஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இருக்கின்றனர்.
- புதிய மத்திய அரசின் பதவி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னை கோட்ட ரயில்வே பெண் லோகோ பைலட் ஐஸ்வர்யா எஸ். மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா இதுவரை இரண்டு லட்சம் மணி நேரங்கள் வந்தே பாரத், ஜன சதாப்தி போன்ற முன்னணி ரயில்களை இயக்கி உள்ளார். ரயில்வே சமிக்ஞைகளை (சிக்னல் ) உடனடியாக உள்வாங்கும் இவரது திறமை ரயில்வே அதிகாரிகளால் பாராட்டு பெற்றுள்ளது. சென்னை - விஜயவாடா, சென்னை - கோயம்புத்தூர் பிரிவில் துவக்க நாள் முதலே வந்தே பாரத் ரயில்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி20 உலகக் கோப்பையின் 14வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதியது. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 15.2 ஓவர்களில் 75 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களை இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
திமுக எம்.பி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்
திமுக கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், கோவையில் கலைஞர் நூற்றாண்டு விழா, பழைய நாடாளுமன்றத்தில் அகற்றப்பட்ட சிலைகளை அதே இடத்தில் வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக மம்தா பானர்ஜி தேர்வு
Mamata Banerjee: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக, கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்
#WATCH | West Bengal Chief Minister Mamata Banerjee says, "I have been elected as the President of the All India Trinamool Congress Parliamentary Party, party MP Sudip Bandopadhyay as the Leader of the Party in Lok Sabha, Dr Kakoli Ghosh Dastidar as the Deputy Leader in Lok… pic.twitter.com/yYnaWeBcqY
— ANI (@ANI) June 8, 2024
Breaking News LIVE: டெல்லியில் காங்கிரஸ் எம்.பி-க்கள் கூட்டம் தொடங்கியது
டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி-க்கள் கூட்டம் தொடங்கியது. சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர்கள் பங்கேற்பு. எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
#WATCH | Delhi: Congress Parliamentary Party meeting begins at the Central Hall of Parliament.
— ANI (@ANI) June 8, 2024
Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi, Congress chief Mallikarjun Kharge, party MP Rahul Gandhi and other party leaders present. pic.twitter.com/S1QABMSBwV
Breaking News LIVE: மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு - மின்வாரியத்துக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!
யானைகள் இறப்பு விஷயத்தில் அரசு உரிய தீவிரம் காட்டவில்லை என்றால் நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும். மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும் பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடுமம் என வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.